CT

அண்மை பதிவுகள்

சிறந்த காலை பழக்கங்கள்...


எல்லாரும் சொல்வதை தான் நானும் சொல்கிறேன் ஒரு பத்து நாளைக்கு வழக்கமாய் எழுவதை விட ஒரு அரை மணி நேரம் முன்னாடி எழுந்து தான் பாருங்களேன் என்னதான் நடக்குதென்று!

Morning habit



எழுந்தவுடன் முதல் வேலையா உங்கள் தலையணை,போர்வை , படுக்கையை ஒழுங்கு படுத்துங்க. ஒரு தனி மனிதனின் ஒழுங்கீனம் இங்குதான் ஆரம்பிக்கிறது.

மூச்சு பயிற்சி செய்யுங்கள்.
அட அதுக்கெங்குங்க நேரம் எனக்கு? அட அதுக்கெல்லாம் பெரிய நேரம் தேவையே இல்லீங்க ,நீங்க தினமும் சட்டை தேய்க்கும் பொது எப்படியும் ஒரு பத்து நிமிஷம் கிடைக்கும். அப்ப நீங்க உங்க மூச்ச நல்ல ஆழமா இழுத்து மெதுவா விடுங்க. அவ்வளவுதான் மூச்சு பயிற்சி முடிஞ்சுது .
காலைல எழுந்தவுடனே உடனே எங்கடா அந்த போன் ? எங்கடா அந்த டி‌வி ? என்று தயவு செய்து தேடாதீர்கள். கண்கள் ஓய்வு எடுத்து அப்பதான் கொஞ்சம் ரெடி ஆயிருக்கும்.

உடனே அதுக்கு வேலை கொடுக்காதீங்க உங்களுக்கு கொஞ்சம் ப்ரீ டைம் காலையில் இருந்தால் உங்களை சுத்தி இருக்கிற குப்பைகளை பாருங்க.உங்களுக்கே உங்கள் மேல கோபம் வரலாம் அந்த கோபத்தோடையே அதேயெல்லாம் சுத்தம் பண்ணீருங்க.நிச்சயமா உங்களுக்கு அதற்கடுத்த நாள் கோபமே வராதுஇந்த ஜிம் ,கிம் எல்லாம் வேண்டா உங்க வீட்டையே ஜிம் ஆக்கிவிடலாம் .ஃபாஸ்ட் பீட் இசையை உங்கள் மியூசிக் ப்ளேயர் ஓடவிட்டு உங்கள் வீட்டு வேலைகளை பாருங்க .வேலைக்கு வேலையும் நடக்கும் உடம்பும் பிட்டாயிரும்.

குளிப்பதற்கு எப்பவுமே குளிர்ந்த நீரையே பயன்படுத்துங்கள். அது எவ்வளவு குளிராக இருந்தாலும் பரவாயில்லை. அடிக்கடி சளி பிடித்துக்கொள்பவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்யவும் .உடல் அலைச்சல் இருக்கும் நாட்களில் மட்டும் வெந்நீர் பயன்படுத்தவும்.

குளிர்ந்த நீரில் குளிப்பதால் அந்த நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருக்க உதவும்ஒரு நல்ல புத்தகத்தை மூன்று பக்கமாவது காலையில் படிப்பது அன்றைய தினத்தின் உற்சாகத்தை ஒரு 10% சதவீதமாவது அதிகரிக்கும்ஒருபோதும் உங்கள் காலை உணவை தவிர்க்காதீர்கள்.

முந்தைய நாளின் இரவு உணவு கொடுக்கும் சக்தி இன்றய நாளின் மதியம் வரைக்கும் நிச்சயமாய் போதவே போதாதுதயவு செய்து உங்கள் குழந்தைகள் எழும் முன்னரே எழுந்துவிடுங்கள் அவர்கள் உங்களை எழுப்புமாறு வைத்துவிடாதீர்கள்முக்கியமாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்களை காலையில் ஒரு நாளும் செய்ய வேண்டாம்.

காலை வேலைகள் முடிந்து வீட்டை விட்டு வெளியே செல்லும் போது வீட்டில் உள்ள அனைத்து மின் உபகரணங்களையும் அணைத்து விட்டு செல்ல மறக்க வேண்டாம்

நன்றி :-)
 -இமான்

No comments