வாழ்க்கையின் சில உண்மைகள்...
உங்களின் முகத்தை பார்த்தே பலர் உங்களை எடைபோடுவர். அக அழகு பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.
எல்லா நேரத்திலும் வாழ்க்கையில் உதவி கிடைப்பதில்லை. உன் வாழ்க்கை உன் கையில்.
நீங்கள் என்று ஒருவரை வெறுக்க ஆரம்பிக்கிறீர்களோ, அன்றிலிருந்து அவரை பற்றி தான் அதிகம் சிந்திப்பீர்கள்.
பணம் இருந்தால் பத்தும் பறந்து போகும். பணம் இல்லையென்றால் கூட இருக்கும் பத்து பேரும் பறந்து போவார்கள்.
நம்மை நம் பெற்றோர்கள் நேசிப்பதில் பாதி அளவு கூட நாம் அவர்களை நேசிப்பதில்லை.
நீங்கள் எவ்வளவு நல்லவராக இருக்க முயன்றாலும் உங்கள் முதுகிற்கு பின் உங்களை திட்டித்தீர்க்கும் ஒரு கூட்டம் இருக்கும்.
எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கவில்லை என்று நீங்கள் புலம்பிக் கொண்டிருக்கும் அதே நிமிடம் உங்களை போல் வாழ்க்கை அமையாதா என்று எவராவது ஏங்கிக் கொண்டிருப்பார்.
நீங்கள் மற்றவர்கள் பற்றிய வதந்திகளை பரப்பும் அதே நேரத்தில் வேறொருவர் உங்களை பற்றி வதந்திகளை பரப்பி கொண்டிருப்பார்.
சாதி இரண்டொழிய வேறில்லை, என்றும் கூறுவர் அதே நேரத்தில் சாதிச் சான்றிதழும் கேட்பார்கள்.
நீங்கள் துணிந்து ஒரு விஷயத்தை செய்து அது வெற்றி பெற்றால் உலகிற்கு நீங்கள் அறிவாளி, தோற்றால் முட்டாள்.
வாழ்க்கை இறுதி வரை நமக்கு கவலைகள் இருக்கவே செய்யும் இன்று உங்களுக்கு நெருக்கமான நண்பராக இருப்பவர், நாளை உங்கள் கைபேசியில் இருக்கும் ஒரு தொடர்பு எண்ணாக மட்டும் மாற வாய்ப்புள்ளது.
நீங்கள் இருந்தாலும் இறந்தாலும் உலகம் மாறப்போவதில்லை
நீங்கள் செய்த நல்லதை இந்த உலகம் மறந்துவிடும், ஆனால் கெட்டதை மறக்காது.
-வைபவ் லக்ஷ்மி
No comments