நாட்கள் - நாள்கள் எது சரியான சொல்
தமிழ் புணர்ச்சி விதிப்படி
நாள் + காட்டி = நாட்காட்டி
நாள் + குறிப்பு = நாட்குறிப்பு
என்பது சரிதான்.
ஆனால் இங்கு நாள்+ கள் என்பது நாட்கள் என
மாறினால் பொருள் மாறுபடும் ஏனென்றால், இதில் வரும் “கள்” ஆனது பன்மையைக்
குறிக்கும் விகுதி, அது ஒரு போதும் முன்னால் உள்ள சொல்லுடன் சேர்ந்து புணராது.
எ- கா :
பறவை – பன்மையில் பறவைகள்
ஆடு – பன்மையில் ஆடுகள்
எனவே ஒன்றுக்கு மேற்பட்ட நாளினை பன்மையில் நாள்
+ கள் = நாள்கள் என்றுதான் பயன்படுத்த வேண்டும்.
அது நாட்’கள்’ என புணர்ந்தால் அதன் பொருளானது
பன்மையைக் கொடுக்கும் விகுதியை குறிக்காது, அந்த ‘கள்’ குடிக்கின்ற பானம் கள் என பொருள்படும்
அதாவது நாட்கள் = நாட்பட்ட + கள் என
பொருள் ஆகும். ஆகவே நாள்கள் என்பதே சரியான சொல் பயன்பாடு ஆகும்.
-கவிஞர் செந்தமிழ்தாசன்
அப்படியானால்,
ReplyDeleteபுல் = புல்கள்
கல் = கல்கள்
பல் = பல்கள் ஆகிவிடும்?
புற்கள், கற்கள், பற்கள் தவறா?
தவறான பதிவு! ‘நாட்கள்’ எனும் சொல் சிலப்பதிகாரத்திலேயே உண்டு. எனில் ஆனானப்பட்ட இளங்கோவடிகளே சொற்புணர்ச்சி தெரியாமல் எழுதி விட்டாரா? ‘கள்’ எனும் விகுதி சொல்லுடன் புணராது என்றால் சொற்கள், கற்கள், புற்கள் என எல்லாச் சொற்களும் தவறா?
ReplyDelete