விழி கண்ட சொப்பனம் || lines of vignesh
அவள்...
விழியின் விந்தையில்
வீனனை வீரனாக்குவாள்
வீரனையும் வீனனாக்குவாள்..!
அவள்...
விழியின் இமை சிமிட்டலின்
எழிலலை- பார்த்தால்
பார்ப்பவரின் இதயத்துடிப்பும்
ஒரு வினாடி நின்று ரசித்த பிறகு துடிக்கும்..!
அவள் விழி என்னைக்
காண- என்
விழியோ அவள் விழியைக்
கண்டது..
அவள் விழி வழி
மனதில் ஒளிந்திருக்கும் என்னை- எனக்கு
மட்டும் காட்டிக்
கொடுத்தது-அவள் கருவிழி..!
பிறகு...
இரு விழியும் ஒரு
பாதையில் பயணிக்க நேசம் என்ற-வலையில்
சிக்கியது..!
பின்பு ஏதோ ஒரு
சப்தத்தில் (என்) விழி விழித்துக் கொண்டது..
விழி கண்ட சொப்பனத்திலிருந்து...[எல்லாம்
கனவா😞 ]
ஆனால் என்னவோ- சொப்பனத்தில்
கண்ட விழியோ
இன்னும் மனதில்
பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது😊
- விக்னேஷ்வரன்
No comments