நினைவுகளின் வரிகள் | lines
நினைவுகளின் வரிகள்
நினைவுகளை சுமக்கிறேன் தாயாக !
நினைவுகளோடு வாழ்கிறேன் கணவனாக !
நினைவுகளை நேசிக்கிறேன் நண்பனாக !
நினைவுகளை மதிக்கிறேன் கடமையாக !
நினைவுகளை சேமிக்கிறேன் உணர்வுகளாக !
நினைவுகளை வாழ்த்துகிறேன் ஆன்மாவாக !
நினைவுகளை பார்க்கிறேன் நிலவுகளாக !
நினைவுகளை எண்ணுகிறேன் நட்சத்திரமாக !
நினைவுகளை மணக்கிறேன் பூக்களாக !
நினைவுகளை சுவாசிக்கிறேன் காற்றாக !
நினைவுகளோடு பிரிகிறேன், ஆன்மாவாக
மட்டுமல்ல நினைவுகளின் காதலனாகவும் !
- கணேஷ்
உறவுகள் என்பது உண்டு வாழ்வதற்கு மட்டும் அல்ல
உணர்ந்து வாழ்வதற்கும் தான்..!
உறவுகள் என்பது ஊர் சுற்றி பார்ப்பதற்கு மட்டும் அல்ல
உள்ளம் சுற்றி பார்ப்பதற்கும் தான்..!
உன்னைக் கண்ட பின்னும் பேச இயலாத தருணங்கள் ஊமையாகின்றன..!
என்னவளின் உதட்டுச் சிவப்பழகின் முன்
என் வீட்டு ரோஜா பூவும் தோற்றது...!
உணர்ந்து வாழ்வதற்கும் தான்..!
உறவுகள் என்பது ஊர் சுற்றி பார்ப்பதற்கு மட்டும் அல்ல
உள்ளம் சுற்றி பார்ப்பதற்கும் தான்..!
-கோகுலன்
உன் நினைவுகள்
பழகிய நாட்கள்,
பேசிய வார்தைகள்,
சின்ன சின்ன சண்டைகள்,
பொய் கோபங்கள்...
ஏனோ! உன்பிரிவுக்கு
பின்பும் வாழ்கிறேன்...
நான் சேகரித்து
வைத்த உன்
நினைவுகள்! தான் இப்பூமியில் நான்
வாழும் மீதி நாட்களோ
தோழி....?
உன்னைக் காணாத பயணங்கள் வெறுமையாகின்றன..!
மூச்சு விடுவது அனிச்சையாக நடக்கிறது...
மூச்சு நின்ற பின்தான் இதுநாள் வரையில் சுவாசித்ததன் அர்த்தம் புரிகிறது..!
நட்பாக பழகி வாழ்வதும் அனிச்சைதான்...
எதிர்பாராமல் நண்பனை பிரிய நேரும் போது தான் நட்பின் அருமை புரிகிறது..!
வார்த்தைகளால் வலிகளை தந்து உன்னை மௌனத்திலேயே அழவைக்குமே அதுதான் இந்த காதலின் தொல்லை ..!
உன் மௌனத்தையே உடைத்தெறிந்து உன்னை மரணப்படுக்கையிலே இருந்து எழ வைக்குமே அதுதான் இந்த நட்பின் எல்லை ..!
-அரவிந்த்
அழகு
பூக்களே பொறாமை கொள்ளும் அழகு தேவதையே,
எனக்கு நீ எப்போது தரிசனம் தருவாய், என் வீ்ட்டு ரோஜா மலரின் ஆணவத்தை அடக்க.
இப்படிக்கு காத்திருப்புடன் உன்னவன்...
கண்தொடும் தூரம் மறையும் வரை
என் விழி உந்தன் திசையை நோக்கியே...
சகோதரி இல்லையே என்ற ஏக்கத்தை சாகடிக்க வந்தவளே,
இன்று என்னோடு பேசாமல் இருந்து என்னை சாகடிக்கிறாய்..!
இப்படிக்கு
-கண்ணீருடன் சகோதரன்
ரதியே, நானோ இங்கு கண்ணீரில் மிதக்கிறேன், நீயோ அதில் ஆனந்த நீராடுகிறாய், இரக்கம் இல்லாதவளே நீ எப்போது இறங்கி வருவாய் என் கண்ணீரை துடைக்க..
காத்திருப்புடன் உன்னவன்..!
உன் நிழலாக நான் இருந்தேனடி அன்று...
உன் நினைவில் கூட நான் இல்லையடி இன்று..!
என்னவளின் உதட்டுச் சிவப்பழகின் முன்
என் வீட்டு ரோஜா பூவும் தோற்றது...!
-சரோ
No comments