விக்னேஷ்-ன் வரிகள் || lines of Vignesh
பயணம்
இனிதே
வேண்டுமொரு அதிகாலை நடைபயணம்...
வேண்டுமொரு பேருந்தின் சன்னலோர பயணம்...
வேண்டுமொரு தொலைதூர தொடர்வண்டி பயணம்...
வேண்டுமொரு கடலோர கப்பல் பயணம்...
வேண்டுமொரு விண்ணிவெளி விமானப் பயணம்...
வசந்த வனத்திலே வேண்டுமொரு பயணம்...
பூக்கள் நிறைந்த சோலையிலே வேண்டுமொரு பயணம்...
தோற்றத்தில் குறை காண பாதையிலே வேண்டுமொரு பயணம்...
வன்மம் கலந்த புனிதத்தை விடுத்துச்செல்ல வேண்டுமொரு பயணம்...
நடைமுறைக்கு (உகந்தவனல்ல)உகந்ததல்ல என்று எண்ணும் பலரை விடுத்துச்செல்ல வேண்டுமொரு பயணம்...
வலிமறந்து வழியறிய வேண்டுமொரு பயணம்...
வானவில்லின் வளைபாதையில் வளைந்து செல்ல வேண்டுமொரு பயணம்...
பணத்தின் பங்களிப்பு இல்லாமல் வேண்டுமொரு பயணம்...
இது போலவெல்லாம் ஒரு சொப்பனம் காண வேண்டுமொரு பயணம்...
இணைய(யா) மோகம்...
கணிப்பொறி கொண்டு கன்னி உன்னைக் கண்டெடுத்தேன் இணையத்திலே
வலை ஒன்றை வீசி என் பக்கத்திலே ஈர்த்தேன் வலைத்தளத்திலே
கன்னி உந்தன் குறுஞ்செய்தி காண விழி விழித்துக் காத்திருந்தது கணினியை நோக்கி
கன்னித்தீவு கதைபோல தொடர்ந்து செல்லத் தோனுதடி
ஏனோ கணினி திரை அணைக்கும் முன்பு என் பக்கத்தை அணைத்துச் சென்றாய்...
மின்னல்...
மணி கணக்கில் காத்திருக்கும் பக்தனைப் போல...
நொடிப் பொழுதில் மின்னலைப் போல வந்து அவள் எழிலில் கண்களை கொள்ளை கொண்டுச் செல்லும் என் இறைவியின் மதிமுகம் காண பல யுகங்களாக காத்திருக்கும் உன்னவன்..!
அன்பின் வரிகள்
அணு அளவு அன்பும் - அண்டத்தையே
ஆட்கொள்ளும் ஆற்றலுடையது...
மேகமில்லா ஆகாசமும் அன்பில்லா உயிர்ச்சுவாசமும் அழகில்லா...
அளவிற்கு மீறிய அதிக அன்பும் அமிர்தம் போல…(உட்)கொண்டவருக்கே நஞ்சாக மாறும்...
நாம் எண்ணியதை நிகழ்த்தி வாழ்வதுதான் வாழ்க்கை, என்பது மதியை நம்புபவன் சொற்கள்...
வாழ்வில் விதியை குறை கூறாமல்..
மதியை நம்பி நடைபோடு அந்த மதி போலே..
இவ்விருட்டு உலகில் நீயும் பிரகாசிக்கலாம்..!
விதியை மதியால் வெல்வோம் தோழா :-)
அளவிற்கு மீறிய அதிக அன்பும் அமிர்தம் போல…(உட்)கொண்டவருக்கே நஞ்சாக மாறும்...
வாழ்க்கை...
நம் எண்ணம் போல் வாழ்க்கை, என்பது விதியை நம்புபவன் சொற்கள்...நாம் எண்ணியதை நிகழ்த்தி வாழ்வதுதான் வாழ்க்கை, என்பது மதியை நம்புபவன் சொற்கள்...
வாழ்வில் விதியை குறை கூறாமல்..
மதியை நம்பி நடைபோடு அந்த மதி போலே..
இவ்விருட்டு உலகில் நீயும் பிரகாசிக்கலாம்..!
விதியை மதியால் வெல்வோம் தோழா :-)
ஓர் எழுத்து தொடர்ச்சி...
ஆடத்துடிக்கும் ஆடவர்களின்ஆடுகளமாம் ஆலமரம்..!
விரும்பியதை விதைத்தால்(தான்)
விரும்புவது விளையும்...தமிழின் தத்துவங்கள் தரும் தன்னிலடங்கா தரவுகளின் (தனித்) தன்மையை தனியொரு தகவல்தளம் தரத் தகுதியானதல்ல..!
-விக்னேஷ்
No comments