எண்ணத் துணுக்குகள் || கவிகருப்பு
சந்தோஷங்களை மனது இருக்கும் எவரோடும் பகிர்ந்து கொள்ளலாம்...
கவலைகளை மனதில் இருப்பவரோடு மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்..!
தேவதைகளாய் எந்த பெண்ணும் பிறப்பதில்லை, ஆனால்
ஒரு ஆணின் உண்மையான அன்பை பெற்ற எந்த பெண்ணும் தேவதையாகமல் இறப்பதில்லை..!
விட்டுப் போன உன்னை பார்க்க கூடாதென கட்டுப்பாட்டில் உள்ளம் இருக்க கட்டுப்பாட்டையும் மீறி கண்கள்
உன் முகம் தெரியவில்லையென்ற
வருத்தத்தில் சப்தமிடுவது
மழைத்துளி மட்டுமல்ல!
என் மனசும் தான்..!
என்னவளே அன்று உன் நிழல் போல் உன்னை பின் தொடர்ந்தேன்...
இன்று என் அருகில் நீ இல்லாததால் உன்னுடன் இருந்த நினைவுகளை பின் தொடர்கிறேன்...
நிழலாக அல்ல நிஜமாக...!
இங்கே மன்னிக்க முடியா தவறுகள் இல்லை...
மன்னிக்க மனமில்லா தவறுகள் வேண்டுமானால் இருக்கலாம்..!
யாரிடமும் காயப்படாத வரை நம் மனசு அழகானது தான்...
யார் மனதையும் காயப்படுத்தாத வரை
நம் சிரிப்பும் அழகானது தான் :-)
வாழ்க்கை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி...
ஒவ்வொருத்தர் கண்ணுக்கு ஒரு அர்த்தம் கொடுக்கும்...
ஒரு சிலருக்கு புரியாம கூட போயிடுது..!
வேண்டிய வரம்
கிடைக்கவில்லை என்றால் ..!
இறைவனும் கல்லாக தெரிகிறான்
மனதில் ஒரு நிமிடமாவது..!
உன் தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருக்கையில்,
சைக்கிள் மணி கூடச் சாகடித்து விடுகிறது
எளிதாக என்னை...
அவள் சொன்னாள்:
எங்கோ பார்த்த முகம் போல தெரிகிறது என்று..!
என் கண்கள் கலங்கின..!
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியிலும் 😢
நீ ஆயிரம் காதல் செய்தாலும் அது அனைத்தும் தோல்வியில் தானடி முடியும்..!
உனக்காக பிறந்தவன் நான் என்பதை நீ உணரும் வரை..!
விட்டுப் போன உன்னை பார்க்க கூடாதென கட்டுப்பாட்டில் உள்ளம் இருக்க கட்டுப்பாட்டையும் மீறி கண்கள்
மட்டும் உன்னைப் பார்க்க...
நீ கண்டு கொள்ளாமல் போனதால்,
கண்ணீர் துளிகள் வெளி வந்து ஆறுதல் தந்தது என் கன்னத்தைத் தொட்டு..!
நான் இன்னும் பாலைவனம்
பார்த்ததே இல்லை என்கிறாய்...
நீ பார்க்காமல் இருப்பதால்தான்
அது பாலைவனமாகவே இருக்கிறது..!
அந்தக் குடையை மடக்கு!
அந்தக் குடையை மடக்கு!
வருத்தத்தில் சப்தமிடுவது
மழைத்துளி மட்டுமல்ல!
என் மனசும் தான்..!
கீறல் விழுந்த கண்ணாடி என்று என்னை தூக்கி எரிந்து
விட்டால் அவள்..!
அதில் கிறுக்கப் பட்டிருப்பது அவளது பெயர் என்பதை
அறியாமல்..!
-கவி கருப்பு
No comments