CT

அண்மை பதிவுகள்

இளாவின் காதல் பயணம்...

tamil kavithaigal

வளைந்து செல்லும் மலை பாதைகளில் மிதமான மழை பெய்து முடித்திருக்க, நீயும் நானும் கை கோர்த்து காதல் நினைவுகள் பேசி கொண்டு நடந்து செல்ல வேண்டும்.

பாதை முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்ல வேண்டும்.

சிறிது தூரம் சென்றதும் கால் வலியால் சாலையோரம் நீ அமர உன் பாதங்களை வருடி உந்தன் கால் பிடித்து விட வேண்டும். அங்கேயே உன் தோள் சாய்ந்து சிறிது நேரம் இளைப்பாற வேண்டும்.

மாலை நேரம் ஆனதும் மரத்தடி நிழலில் உன் மடிமீது நான் சாய தலை கோதி நீ என்னை தூங்க வைக்க வேண்டும், நான் தூங்கியதும் எனக்கு தெரியாமல் செல்லமாய் என் நெற்றியிலே நீ முத்தமிட வேண்டும்.

தூங்கி எழுந்ததும் காரணமின்றி செல்லமாய் குட்டி சண்டை நீ போட வேண்டும், உன்னை நான் சமாதானம் செய்ய கிறுக்கனை போல் பலவற்றை உனக்காக நான் செய்ய வேண்டும். இறுதியாய் உந்தன் அழகிய புன்னகையால் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இரவு நேரம் வந்ததும் கனவினில் காதல் செய்ய வேண்டும் காதலியே...

மீண்டும் காதல் பயணம் தொடர வேண்டும்....

-இளா

3 comments: