CT

அண்மை பதிவுகள்

மனதோடு நின்ற கர்ம வீரர்


kamarajar
குடும்பத்திற்காக வாழ்ந்திருந்தால்
குடும்பத்தோடு நின்றிருப்பாய்...
கட்சிக்காக வாழ்ந்திருந்தால்
கற்ச்சிலையாய் நின்றிருப்பாய்...
பணத்திற்காக வாழ்ந்திருந்தால்
பகட்டோடு நின்றிருப்பாய்...
கடமைக்காக வாழ்ந்திருந்தால்
கண்ணீரோடு கரைந்திருப்பாய்...
பதவிக்காக வாழ்ந்திருந்தால்
பதட்டத்தோடு நின்றிருப்பாய்...
உண்மைக்காக வாழ்ந்திருந்தால்
உணர்வோடு நின்றிருப்பாய்...
மரியாதைக்காக வாழ்ந்திருந்தால்
மாலையோடு நின்றிருப்பாய்...
மதத்திற்காக வாழ்ந்திருந்தால்
மண்ணோடு நின்றிருப்பாய்...
மக்களுக்காக வாழ்ந்ததால் தான் காமராஜரே
எங்கள் மனதோடு நின்றாயோ...!
-கோகுலன்

No comments