உன் பார்வை அம்புகள் பத்திரமாய் - என்
இதய அறையில் இரத்தக் கறையோடு புதைக்க நேரமில்லை
தூங்கும் போதும் உன் நினைவாக...
உன்னைப் பற்றி கவிதை வரைந்தேன் கண்ணீர் சிந்தியது என் எழுதுகோல்
ஓராயிரம் பார்வைப் பாத்தும் உடையவில்லையா உன் மனப்பாறை...
காலமெல்லாம் காத்திருந்தேன் உன் வரவிற்கு -
மலரோடு வந்து நின்றாய் மணப்பெண்ணாய்...
மறக்க மனமில்லை புரிந்து கொண்டேன் -காதல்
கனவெல்லாம் கல்லறையோடு என்று...
மண்டியிட்டேன் மரணத்தாயின் முன்னே
காலமானேன் கல்லறையின் முன்பாய் கண்ணீரோடு..!
என்றும் எழுத்தாணி முனையில்...
- கவிஞர் செந்தமிழ்தாசன்
மௌனத்திலே மரித்த முதல்காதல்...
Reviewed by
தமிழ்கரு
on
November 29, 2017
Rating:
5
No comments