CT

அண்மை பதிவுகள்

அதிகாலை காற்றை ரசித்து அனுபவியுங்கள்

(நீண்ட ஆயுளுக்கான ஒரு துறவியின் ரகசியம் இங்கே இருக்கிறது)



எல்லா நாட்களும் ஒரே மாதிரியானவை அல்ல

ஜென் புத்த மதத்தைப் பின்பற்றுகின்ற துறவிகள் நீண்ட நாட்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறது . 
சுவாசப் பயிற்சிகளும் உணவும் நீண்ட ஆயுளில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை . ஆனால் ஒழுங்குடன்கூடிய ஒரு வாழ்க்கைமுறை ஆன்மிகரீதியாகவும் சரி , உடல்ரீதியாகவும் ஒரு  நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நான் நம்புகிறேன் .

சரி ,    

நான் தினமும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிடுகிறேன் . நான் எழுந்தவுடன் முதல் வேலையாக அதிகாலைக் காற்றால் என்னுடைய நுரையீரல்களை நிரப்புகிறேன் . நான் வசித்து வருகின்ற மடத்தைச் சுற்றி நான் நடந்து கொண்டிருக்கும்போது , பருவகால மாற்றங்களை என் உடல் அனுபவித்துக் கொண்டிருக்கும் .

ஆறரை மணிக்கு நான் புத்த மதப் புனித நூல்களிலிருந்து வாசித்து , புத்த  மதப் பொது வழிபாட்டை நடத்துகிறேன் . அதற்குப் பிறகு நான் என்னுடைய காலை உணவை உட்கொள்கிறேன் . பின்னர் அன்றைய வேலைகளைப் பார்ப்பதில் நான் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன் . இதே நடைமுறைதான் தினமும் தொடர்கிறது . ஆனால் ஒரு நாளைப்போல மறுநாள் இருக்காது . 

அதிகாலைக் காற்றின் சுவை , காலைக் கதிரவனின் வருகை , என் கன்னங்களை உரசிச் செல்கின்ற குளிர்காற்றின் வருடல் , வானத்தின் வண்ண ஓவியம் , மரத்தில் சலசலக்கும் இலைகள் போன்ற அனைத்தும் தினமும் மாறிக் கொண்டேயிருக்கும் .

இந்த மாற்றங்களை முழுமையாக அனுபவித்து உணர அதிகாலை நேரமே உகந்தது . இயற்கையின் இந்த மாற்றங்களை உடல்ரீதியாக அனுபவிப்பற்காகத்தான் ஜென் துறவிகள் சாசென் தியானத்தைப் பொழுது புலர்வதற்கு முன்னதாக மேற்கொள்கின்றனர் . 
அந்த அதிகாலை தியானத்திற்குக் ' கியோட்டன் சாசென் ' என்று பெயர் .

அழகான அதிகாலைக் காற்றை சுவாசிப்பதன் மூலம் , துறவிகளாகிய நாங்கள் எங்களுடைய உடலுக்கும் மனத்திற்கும் புத்துணர்ச்சியூட்டிக் கொள்கிறோம் .

No comments