CT

அண்மை பதிவுகள்

தினமும் 15 நிமிடங்கள் முன்னதாக எழுந்திருங்கள் | 2

 

(உங்கள் இதயத்தில் இடமில்லாமல் இருக்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறை)

எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் மூழ்கியிருப்பது உங்களை ஊக்கமிழக்கச் செய்துவிடும்.

நேரம் நமக்குப் பற்றாக்குறையாக இருப்பதாக நாம் உணரும்போது , அது நம்முடைய இதயத்திற்கும் பரவிவிடுகிறது . உடனே நாம் தன்னிச்சையாக , " எனக்கு வேலையிருக்கிறது . எனக்கு நேரமில்லை ! " என்று கூறத் தொடங்குகிறோம் . நாம் இப்படி உணரும்போது நம்முடைய மனம் மேலும் பரபரப்பாகிவிடுகிறது . ஆனால் உண்மையிலேயே நாம் அவ்வளவு மும்முரமாக இருக்கிறோமா ? மேலும் , நாம்தானே நம்மை அவசரப்படுத்திக் கொண்டிருக்கிறோம் ?

நாம் அவசர அவசரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பது நமக்கு நேரமில்லாத காரணத்தால் அல்ல ; மாறாக , நம் இதயத்தில் இடமில்லாத காரணத்தால்தான் நாம் அப்படி இருக்கிறோம் . உங்களுக்கு நேரமில்லாமல் இருப்பதாக நீங்கள் உணரும் நாட்களில் காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகக் கண்விழிக்க முயற்சி செய்யுங்கள் . கண்விழித்தவுடன் , நன்றாகச் சோம்பல் முறித்துவிட்டு , அடிவயிறுவரை மூச்சிழுத்து மெதுவாக சுவாசியுங்கள் . உங்களுடைய சுவாசம் சீராகும்போது உங்கள் மனமும் அமைதியடையும் . பிறகு , நீங்கள் காபியோ அல்லது தேநீரோ பருகும்போது உங்கள் வீட்டுச் சாளரத்தின் வழியாக வெளியே தெரியும் வானத்தைப் பாருங்கள் , பாடும் பறவைகளின் கீச்சொலிகளைச் செவிமடுக்க முயற்சி செய்யுங்கள் . அப்போது ஒரு விநோதமான விஷயம் நடக்கிறது : நீங்கள்  சட்டென்று உங்கள் மனத்தில் சிறிது இடத்தை உருவாக்குகிறீர்கள் . 


காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாக எழுந்திருப்பது உங்களுடைய ஓய்வில்லா நிலையிலிருந்து மாயாஜாலமாக உங்களை விடுவிக்கும் .


No comments