நேருவின் பொன்மொழிகள்
மனிதன் தான் சிந்தனை செய்வதில் உள்ள உயர்ந்த குறிக்கோள்களால் வளருகிறான்.
அறநெறியை மறந்து விடில், அழிவொன்றே விளைவாகும்.
இதயத்து பொறுத்தே, இனிய சுதந்திரம்.
உலக வரலாற்றை படிப்பதை விட, உலகில் வரலாறு படைப்பதே இனிமை.
நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது; அறிவில்லாத நற்பண்பு பயனற்றது.
அடக்கம் நல்லது தான். ஆனால், அது அடிமைத்தனமாக இருக்கக் கூடாது.
உலகத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என யாராலும் கூற முடியாது.
காலம் ஒரு அற்புதமான மாயம்; நம் கைக்குள் அடக்க முடியாத விசித்திரம்.
உலகில் உள்ள எந்த நாட்டு மக்களையும் விட இந்தியர்கள் பெருந்தன்மை மிக்கவர்கள்.
நாடுகளுக்காகட்டும், மனிதர்களுக்காகட்டும், பயத்தை போல் தீமை தருவது வேறில்லை.
மொழி ஒரு நாட்டினுடைய தனி மனிதனின் வாழ்வில் முக்கிய அம்சமாகும்.
வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மையே.
மனிதனை விட சக்தி வாய்ந்தது சூழ்நிலையே.
அச்சம் அறிவுக்கு ஆரம்பம், பொய்மையின் மிக நெருங்கிய நண்பன்.
மற்ற எல்லா வழிகளையும் விட ஜனநாயகம் ஒன்று தான் மனித குலத்தை ஆளக்கூடிய மிக உயர்ந்த மார்க்கமாகும்.
-நேரு
No comments