CT

அண்மை பதிவுகள்

சொல் பொருள் அறிவோம் -2

தற்பம் - கருவம் , பாவம் , மேல்நிலை , மனைவி , துயிலிடம் .
தனை - அளவு , எண் .
தற்போதம் - தன்னறிவு .
தற்றுதல் - இறுக உடுத்தல் .
தனகு - மனமகிழ்ச்சி .
தனஞ்சயன் - தீ , ஒரு வாயு .  தன்மேம்பாட்டுரை - தற்புகழ்ச்சி .
தன்வழி - தன்பொறுப்பு .

தனிசு - கடன் .
தன்னை - தாய் , தமயன் , தமக்கை . தன்னையறிதல் - ஆத்மதரிசனம் . தனிட்டை - அவிட்டம் .
தனிதம் - முழக்கம் .
தனிநிலை - ஆய்த எழுத்து .
தா - பரப்பு , கொடு , கேடு , பகை , வருத்தம் , வலி , பாய்தல் , குற்றம் .  தாட்டிகம் - அகந்தை , பலம் .
தாட்படை - கோழி .

தாகம் - ஆசை , எரிவு .
தாணு - நிலைபேறு , தாவரம் , தூண் , மலை .
தாண்டவம் - கூத்து .
தாக்கு - போர் , இடம் , அடி , தடி , மிகு பாரம் .
தாதச்சி - தவப்பெண் .
தாங்கல் - நீர் நிலை , பூமி , துன்பம் , சகிப்பு .
தாதமார்க்கம் - தொண்டு வழி .
தாங்கி - ஆதாரம் , பூண் .
தாதன் - தந்தை , அடிமை .

சாயுச்சியம் - இறைவனோடு இரண்டற கலத்தல் , மோட்சம் .
சாமுத்திரிகம் - உடல் உறுப்பின் இலக்கண நூல்.

சாம்பல் - பழம்பூ , சாம்புதல் , நாவல் , முதுமை .
சாயை - மனைவி , நிறம் , புகழ் , நிழல் , ஒப்பு .
சாய் - கோரை , புகழ் , நிறம் .
சாய்தல் - மெலிதல் , அசைதல் , அழிதல் , தோற்றோடல் , கவிழ்தல் , தளர்தல் , வருந்துதல் 

சாம்பிராச்சியம் - பெருஞ்செல்வம் , சக்கரவர்த்தி ,
சாலம் - கூட்டம் , நடிப்பு , மதில் , வலை , அரண் , சபை , மாயவித்தை .
சாரிகை - மைனாப்பறவை , சுழல் காற்று , வட்டமாய் ஓடல் .
சாலிகை - கவசம் .
சாரு - அழகு , கிளி .
சாருகன் - கொலை செய்பவன் .
சாலுதல் - பொருந்துதல் , அமைதல் , மிகுதல் , நிரைதல் , ஒவ்வுதல் .
சார் - அணை , அழகு , கறை , இடம் , திண்ணை.

சாலேகம் - பலகணி , சரளம் , சந்தனம் , பூவரும்பு .
சாலேயம் - நெல்விளையும் நிலம் .
சார்த்தூலம் - புலி .
சார்ந்தார் - நண்பர் , உறவினர் .
சாலை - அறை , அறச்சாலை , கூடம் , பொது மண்டபம் , குதிரைப் பந்தி .
சார்பு - பற்று , உதவி , இடம் , சேர்பு , ஆதாரம் , பிறப்பு , அணைவு , அடைக்கலம் .
சால் - மிகுதி , அமைதி .


சாவி - பதர் , திறவு கோல் .
சானவி - கங்கை .
சான்றவர் - அறிந்தவர் .
சாழல் - மகளிர் விளையாட்டு .
சாளிகம் - வண்டு .
சாளிகை - பணப்பை .
சான்றாண்மை - பொறுமை , ஞானம் , சால்புடைமை .
சான்று - சாட்சி .
சான்றோன் - அறிஞன் .


சிகண்டம் - தலைமுடி , மயில்தோகை .  சிகாவலம் - மயிர் , பாசி . 
சிகதை - மணற்குன்று , வெண்மணல் .  சிகரம் - மலை , மரத்தின் நுனி , அந்தம் , வட்டில் , அலை , காக்கை , கோபுரம் , உயர்ச்சி .
சிகிச்சை - வைத்தியம் , பரிகாரம் .
சிகழிகை - மயிர்முடி , மாலை கொண்டை . சிகரி - எலி , கருநாரை , கோபுரம் , மரம் , மலை .

சிகுவை - நா , வாக்கு .
சிகை - குடுமி , கொண்டை , பந்தம் , தலை , கவனம் , அக்கினிச்சுவாலை .
சிகல் - தொழில் .
சிக்கம் - உச்சி , குடுமி , சிறை , சீப்பு , உறி , வலை .
சிட்டபரிபாலனம் - நல்லோரைக்காத்தல் .  சிக்கர் - கள் .
சிக்கி - நாணம் .
சிட்டம் - பெருமை , பொறுமை , நல்லறிவு .

திட்டிவாயில் - ஒடுக்கவாயில் .
திட்டை - உரல் , திண்ணை , மேடு .
திகை - திசை , தேமல் .
திக்கசம் - திசை யானை .
திக்காரம் - நிந்தை .
திட்பம் - திண்மை , மனவுறுதி .
திணர் - செறிவு .
திக்கு - சமயம் , திசை , புகலிடம் .
திணுக்கு - நடுக்கம் .

திக்குவிசயம் - எல்லாத் திசைகளையும் வெல்லல் .
திணை - ஒழுக்கம் , வீடு .
திண்டி - யானை , பருமம் .
திண்டிமம் - தம்மட்டம் .
திண்டிறல் - மிக்க வீரம் .
திண்ணகம் - செம்மறிக்கடா .  திடகாத்திரம் - கட்டுள்ள தேகம் .

தியாச்சியம் - விலக்கப்படும் நேரம் .  திரஸ்கரித்தல் - நீக்குதல் , நிந்தித்தல் .  திதிமைந்தர் - அசுரர் .
திதைதல் - பரவுதல் .
தித்தம் - கசப்பு .
தித்தி - துருத்தி , தேமல் , இன்பம் , ஒரு வாத்தியம் .
திரஸ்காரம் - நிந்தை , நீக்கம் .
திரங்கல் - மிளகு .
திரங்குதல் - உலர்தல் , சுருளுதல் , சுருங்குதல் , தளர்தல் .

தாத்திரி - பூமி , தாய் .
தாபசன் - தவசி .
தாபதநிலை - கைம்மை நோன்பு .  தாடாண்மை - முயற்சி .
தாடு - வலிமை , தலைமை .
தாட்டி - தைரியம் , சாமர்த்தியம் .
தாபந்தம் - வேதனை .
தாபம் - துன்பம் , வெப்பம் , காடு .
தாரணி - பூமி , மலை .

தாதா - பாட்டன் , பிரமன் , வள்ளல் .  தாங்குதல் - அணைத்தல் , பொறுத்தல் , படகு தள்ளுதல் , விலகிப்போதல் . 
தாது - காவிக்கல் , சுக்கிலம் , உலோகம் , நாடி , தேன் , சொல்லின் மூலம் , சக்தி , நீறு , பகுதி , பூந்தாது , பொடி , சாணம் .  தாதை - தந்தை , பிரமன் , பாட்டன் .  தாடங்கம் - காதணி .
தாடனம் - அடித்தல் , தட்டுதல் .

No comments