உயிர்-சைபார்க்-செயற்கை உயிர்: பொறியியல் என்றால் என்ன ?
உயிர் பொறியியல்:
உயிர் பொறியியல் என்பது ஓர் உயிரினத்தின் வடிவத்தையும், திறன்களையும், தேவைகளையும், விருப்பங்களையும் மாற்று நோக்கத்தோடு உயிரியல் நிலையில் நிகழ்கின்ற மனிதக் குறுக்கீடுகள் ஆகும்.
எடுத்துக்காட்டாக - மரபணுவை பதிய வைத்தல்.
தற்காலத்தில் மரபணு மாற்று சோதனைகள் பல நடந்து வருகிறது. ஆனால் இதன் துவக்கமாக 1996 லே செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் தோன்றிய செய்தி
ஒரு எலியின் மீது பசுவின் குருத்தெலும்பு உயிரணுவை அறிவியலாளர்கள் பதிய வைத்தனர் அதன் விளைவாக எலியின் முதுகின் மீது செயற்கையான ஒரு பகுதியை வளர்ந்திருந்தது.
அதே போல் 2000 ஆம் ஆண்டில் பிரெஞ்சு உயிர் ஓவியர் ஒருவர் தான் வரைந்த முயலை பச்சை நிறத்தில் ஒளிரும் படி இருந்தால் எப்படி இருக்கும் என எண்ணி அந்த யோசனையை பிரெஞ்ச் ஆராய்ச்சிக் கூடத்தில் அறிஞர்களிடம் பகிர்ந்து அதே போல் முயல் நிற தோற்றத்தை மாற்ற எண்ணினர். அதற்காக பச்சை நிற ஜெல்லி மீனின் அணுவை எடுத்து வெள்ளை முயலுக்கு செலுத்தி எதிர்பார்த்தபடி ஒளிரும் பச்சை நிற முயலை பெற்றனர்.
சைபார்க் பொறியியல்:
சைபார்குகள் என்பவை இயற்கை உறுப்புகளையும் செயற்கை உறுப்புகளையும் கொண்ட இனங்களாகும். இயந்திர உறுப்புகளை கொண்ட ஒரு மனிதன் இதற்கான நல்ல எடுத்துக்காட்டு.
மேலும் ஒரு எடுத்துக்காட்டாக டிபன்ஸ் அட்வன்செட் ரிசர்ச் பிராஜக்ட் ஏஜன்ஸி என்ற அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் பூச்சிகளிலிருந்து சைபார்குகளை உருவாக்கி கொண்டிருக்கிறது
அதாவது ஈ அல்லது கரப்பான் பூச்சி போன்றவற்றின் உடலுக்குள் மின்னணுச்சில்லுகள், உணர்விகள், செயலிகள் ஆகியவற்றைப் பொருத்தி ஒரு தனி நபரை கொண்டு அல்லது ஒரு தானியங்கி கருவி கொண்டு பூச்சியின் அசைவுகளை தொலைதூர இடம் ஒன்றிலிருந்து இயக்கி அதனிடம் இருந்து தகவல்களை சேகரிக்கிறது. ஒலி, ஒளிப்படம்தான் அதன் நோக்கம். 2006 ஆம் ஆண்டில் அமெரிக்க கப்பற்படை கடலடி போர் மையம் சைபார்க் சுறாக்களை உருவாக்குவது தான் முதல் நோக்கமாக அறிவித்திருந்தது மீன்களின் உடலுக்குள் பதிக்கப்படுகின்ற நரம்பிய கருவிகளைக் கொண்டு அவற்றின் நடத்தை கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தனர் என்றும் தன் அறிக்கையில் குறிப்பிட்டது.
சேப்பியன்ஸ் கூட மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் பிறவியிலேயே காது கேளாதோர் கேட்பதற்கு உதவுகின்ற கருவிகள் சில சமயங்களில் இயந்திர காதுகள் என்று அழைக்கப்படுகின்றன காது கேளாத ஒருவருடைய தலைப்பில் பதிய வைக்கப்பட்டுள்ளது கருவி ஒன்று சேவையின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஓர் ஒலிவாங்கியின் மூலமாக ஒலிகளை உள்வாங்கிக் கொண்டு பிறகு அவற்றை அலசி மனிதர்களை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை மின் சமிக்கைகள் மாற்றி நேராக மத்திய செவி நரம்புக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து மூளைக்கு அனுப்புகிறது.
இதேபோல் ரெட்டினா இம்பிளான்ட் என்ற ஒரு ஜெர்மானிய நிறுவனம் பார்வையற்ற மக்களுக்கு ஒரு அளவு பார்வை கிடைக்க உதவக்கூடிய செயற்கை விழித்திரை உறுப்பு ஒன்றை உருவாக்கிக்கியது. இதேபோல் தான் இயந்திரக் கைகள் கால்கள் போன்றவை.
செயற்கை உயிர் பொறியியல்:
செயற்கையான இனங்களை தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
கணினி நிரல்கள் அதாவது நச்சுநிரல் அதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன தம்மைத் தாமே வளர்த்துக் கொள்ளக் கூடிய திறன் நச்சு நிரலுக்கு உண்டு. இது இணையத்தின் வழியே பரவிக் கொண்டிருக்கின்றது விரும்பியவாறு தன்னைத்தானே நகல் எடுத்துக் கொள்கிறது நம் உலகில் இருப்பது போலவே இந்த நிரல்கள் தனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ள இப்போது போட்டி போட்டுக் கொண்டே இருக்கிறது
இதை இவ்வாறு யோசித்துப் பாருங்கள் உங்களால் உங்களின் மூளையை ஒரு வன்தட்டில் நகலெடுத்து அதை உங்கள் மடிக்கணினியில் ஏற்க முடிவதாக வைத்துக் கொள்வோம் அப்போது உங்களுடைய மடிக் கணினியால் ஒரு சேப்பியன்ஸ் போல சிந்திக்கவும் உணர முடியுமா? முடியும் என்றால் அந்த சேப்பியன்ஸ் நீங்களா? அல்லது வேறு ஒருவரா?
இதற்கான ஆராய்ச்சிகள் 2005 ஆம் ஆண்டிலிருந்து உருவாக்கப்பட்ட மனித மூளை பணித்திட்டம் மூலம் நடைபெற்று வந்தது.
அதன் விளைவாகவே இன்று செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திர மனிதனை உருவாக்க சாத்தியமானது அதுமட்டுமல்லாமல் அழிந்த இனமான டைனோசரஸ் - ன் செயற்கை இயந்திரம் சீனாவில் அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் தற்கால மனிதர்களை மட்டுமல்லாமல் அழிந்த இனங்களான விலங்குகள் மற்றும் பல ஹோமோ இனங்களையும் மீண்டும் தோற்றுவிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வருங்காலத்தில் நுண்ணறிவு சார் வடிவமைப்புச் செயல்முறையானது இயற்கை தேர்ந்தெடுப்புச் செயல்முறையை மேற்கண்ட மூன்று வழிகளில் ஏதோ ஒன்றின் மூலம் தூக்கி எறியக்கூடும்
No comments