நீல நிலவு(blue moon) என்றால் என்ன?
நீல நிலவு என்றதும் நீல நிறத்தில் நிலா காட்சியளிக்கும் என்று அர்த்தமல்ல...
ஒரு வருடத்தில் மாதத்திற்கு ஒருமுறை என்று 12 மாதங்களுக்கு 12 முறை முழு நிலவு வருவது இயல்பு. ஆனால் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு முழு நிலவு கூடுதலாக இடம்பெறும் இதனை தான் ஆங்கிலத்தில் "புளு மூன்" என்பர்.
புளு மூன் என்ற சொல் ஆங்கில இலக்கியத்தில் மிக அருமையாக/அரிதாக நிகழும் நிகழ்வினை குறிப்பதற்காக (once in a blue moon) பயன்படுத்துவர். அதாவது தமிழில் "அத்தி பூத்தார் போல" என்ற வாக்கியத்திற்கு இணையானது.
2020 ஆம் ஆண்டில் அக்டோபர் 1 அன்று முழு நிலவு நாள். அதே போல் அக்டோபர் 31 அன்றும் முழு நிலவு நாள் என்று ஒரு மாதத்தில் இரு முறை முழு நிலவு தோன்றுகிறது. இப்படி ஒரே மாதத்தில் 2 முறை தோன்றும் நிலவை தான் நீல நிலவு (blue moon) என்பர்.
(சிலர் ஒரே மாதத்தில் 2வது முறை தோன்றும் நிலவினை நீல நிலவு என்பர்.)
👍
ReplyDelete