சேப்பியன்ஸ் || நூல் குறிப்பு
மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
எழுதியவர்: யுவால் நோவா ஹராரி
தமிழில் - நாகலட்சுமி சண்முகம்
நெருப்பு - நமக்கு சக்தியைக் கொடுத்தது
வம்புப் பேச்சு - நமக்கிடையே கூட்டுறவை வளர்த்தது
வேளாண்மை - நம்முள் பேராசையை தூண்டியது
கட்டுக்கதைகள் - சட்டம்-ஒழுங்கை பராமரிக்க உதவின
பணம் - நாம் நம்புவதற்கு ஒன்றை கொடுத்தது
முரண்பாடுகள் - கலாச்சாரத்தை உருவாக்கின
அறிவியல் - நம்மை படுபயங்கரமான வர்களாக ஆக்கியது.
இதுதாங்க இந்த புத்தகத்தோட அட்டையின் முதற் பக்கத்தில் இருக்கிற தகவல்.
இந்த புத்தகத்தில் நாம பயணிக்கப்போகும் பாதை வரலாற்று காலத்திலிருந்து இந்தகாலம் வரைக்கும்.
அதாவது முதல்ல பிரபஞ்சம் உருவானதிலிருந்து இயற்பியலின் பிறப்பு, வேதியலின் பிறப்பு, பூமி உருவானது; உயிரினங்களின் தோற்றம்; உயிரியல் உருவானது இது எல்லாத்தையும் இதுல தெரிஞ்சிக்கலாம்.
அறிவு புரட்சி
இந்தப் பகுதியில் முக்கியத்துவம் இல்லாத ஒரு விலங்கு ஆரம்பிச்சு ;
பேரினம்-னா என்ன?
ஹோமோ சேப்பியன்ஸ்-னா என்ன?
கிழக்கு ஆப்பிரிக்காவில் குரங்குகள் தோன்றியதிலிருந்து நியாண்டர்தால் எர்கேஸ்டர், சோலோ என்சிஸ்... போன்ற இனங்களின் தொடக்கமும்முடிவும்.
சிந்தனைக்கான விலை:
அதாவது பரிணாம வளர்ச்சி மனிதர்கள் தங்களுடைய ஆற்றலை தசைகளிலிருந்து நரம்பணுக்களுக்கு திசை திருப்பி அதன் காரணமாக மூளை வளர்ச்சி பெற்று சிந்திக்கும் மனிதனாக மாறியது.
ஜெர்மனி ஸ்டேடல் குகையிலிருந்து யானைத் தந்தத்தில் சிங்கம் மனிதனின் சிற்பம் முப்பத்தி இரண்டாயிரம் ஆண்டு பழமையானது இதுவே மனிதனின் மனதிற்குள் இருக்கும் கற்பனை திறனுக்கான முதல் எடுத்துக்காட்டு.
ஆதிமனிதனின் முதல் செல்லப்பிராணி 12,000 ஆண்டுகளுக்கு முன் ?
லாஸ்கா குகையின் ஓவியம் 15000 முதல் 20000 ஆண்டுக்கு முற்பட்ட ஓவியம் கூற வருவது என்ன?
அர்ஜெண்டினாவில் உள்ள கைகள் குகை மூலம் ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடிகள் பதிவு செய்தது எதற்காக?
பிற இனங்களின் அழிவிற்கு நாம் தான் பொறுப்பா?
ஆஸ்திரேலியா பெரு விலங்குகளின் அழிவு ஹோமோ சேப்பியன்ஸ் பதிய வைத்துள்ள முதல் குறிப்பிடத்தக்க அடையாளம்.
வேளாண் புரட்சி
தெய்வத்தின் குறுக்கீடு பிரமிடுகளின் உருவாக்கம் கற்பனையான ஒழுங்குமுறை
பணத்தின் வாசனை பண்டமாற்று பணம் எப்படி வேலை செய்கிறது தங்கத்தின் புழக்கம்
பணத்தின் விலை மதிப்பு
பேரரசு உருவான விதம்
அறிவியல் புரட்சி
முதலாளித்துவம்
நவீன காலகட்டம், சமூகம், குடும்பம்
மகிழ்ச்சி - வேதியியல் மகிழ்ச்சி
எட்வர்டோ காக் உயிர் ஓவியரின் பச்சைநிற ஒளிரும் முயல்; உயிர் பொறியியல்; சைபார்க் பொறியியல்; ஹோமோ சேப்பியன்ஸ் இன் முடிவு
இவற்றையெல்லாம் பற்றி நன்கு தெரிந்து கொள்ள சேப்பியன்ஸ் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.
"மனிதன் கண்டுபிடித்த மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்"
"தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களை விட அப்படி ஒன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை"
No comments