CT

அண்மை பதிவுகள்

சாமம், தானம், பேதம், தண்டம்


சாமம், தானம், பேதம், தண்டம் இந்த நான்கும் தான் நாம் மக்களை அணுகுவதற்கான 4 வழிமுறைகள். 

என்னடா புரியாதமாரி ஏதோ சொல்றானு பாக்குறீங்களா... அது ஒன்னுமில்லைங்க இந்த நாலும் சமஸ்கிருத வார்த்தைகள் இத உபாய சதுஷ்டியம்-ன்னு சொல்லுவாங்க அதாவது தமிழ்-ல 4 வழிகள் -ன்னு அர்த்தம்.

இந்த நாலு வழிகள் மகாபாரத காலத்தில இருந்து நம்ம காலம் வரைக்கும் நடைமுறையில கடைபிடிச்சிட்ருக்க ஒன்னுதாங்க.



சாமம் - இது சொல்ல வர்றது என்னன்னா.. அன்பு(அ) சமாதானத்தை முன்னிறுத்தி தான் எந்த நபரையும் முதல்ல அணுக வேண்டும். இது சரியா வரலயா..அடுத்ததா

தானம் - இது ஏதாச்சு தானத்தையோ இல்ல சலுகையையோ கொடுக்கறதுதான் இந்த வழி..
இதுவும் ஒத்து வரலயா... அடுத்த வழி

பேதம் - இதுதாங்க நம்ம நினைச்சது முத ரெண்டு வழியிலயும் நடக்கலனா பின்பற்ற வேண்டிய வழி .இந்த வழி கொஞ்சம் மட்டமான வழி தாங்க... அதாவது சூழ்ச்சி செஞ்சோ இல்ல ஏதாச்சு ஒரு விதத்துல எதிரியோட பலத்த குறைச்சு நமக்கு அடி பணிய வைக்கிறது.. இதுவும் நடக்கலனா தான்.. 

தண்டம் - அதாங்க கடைசியா போர் ல தான் முடியும் பிறகு தண்டனை தான் தீர்வா இருக்கும்.
இந்த வழி பாதிப்பு இரண்டு பக்கமும் இருக்கும்.



தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் படைப்பிலிருந்து குறுந்தகவல்.



No comments