CT

அண்மை பதிவுகள்

பின்பி என்றால் என்ன


பாலிண்ட்ரோம்  என்ற ஆங்கிலச் சொல்லானது கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும் இந்தச் சொல் ஆங்கில எழுத்தாளர் பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது இதனை தமிழில் மாலைமாற்று () இருவழியொக்கும் சொல் () பின்பி என்றும் அழைப்பர்.





பாலிண்ட்ரோம் என்பதின் பொருள் என்னவென்றால் ஒரு சொல்லையோ அல்லது தொடரையோ அல்லது இலக்கத்தையோ இடமிருந்து வலமாகவும் அல்லது வலமிருந்து இடமாகவோ படிக்கும் பொழுது ஒரே பொருளைத் தருவது அதாவது முன்னிருந்து பின்னும் பின்னிருந்து முன்னுமாக படித்தாலும் ஒரே பொருளைத்தருவது பாலிண்ட்ரோம் அதாவது மாலைமாற்று என்பர்.





இதுவரையில் கண்டறியப்பட்ட பழமையான மாலை மாற்றான் அது கிபி 79 ஆம் நூற்றாண்டில் லத்தீன் மொழியில் இருந்த சொல்லாகும்.









மாலைமாற்று-க்கு தமிழ் மொழியில் உள்ள சில எடுத்துக்காட்டுகள்





சொற்கள்:





தாத்தா





பாப்பா





மாமா





 விகடகவி





 காக்கா





கைரேகை





குடகு





தொடர்:





மேளதாளமே மேகராகமே





தாரா ராதா





தேரு வருதே மோரு வருமோ





 மோரு வருமோ தேரு வருதே.





பொதுவாக மாலை மாற்றில் வரும் நிறுத்தற்குறிகள் இடைவெளிகள் பெரிதாக கவனிக்கப்படுவதில்லை.





10 மாலைமாற்று திருப்பதிகங்களும் ஒரு மாலை மாற்று திருக்கடைக் காப்பும் திருஞானசம்பந்தர்  நாயனார் எழுதிய மாலைமாற்று திருப்பதிகத்தில் உள்ளன





யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகாகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா





இதுபோல தமிழ் இலக்கியங்களில் பல மாலைமாற்று பாடல்கள் உள்ளன






ஆங்கிலத்தில் சில எடுத்துகாட்டுகள்:





(Palindrome Examples)





Civic,Radar,Madam,Malayalam,Refer,Noon,Pop...





Madam, I am adam






இந்த வருடத்தில் கூட 02-02-2020 என்ற தேதி ஒரு மாற்றுமாலை ஆகும்.





திரைப்பாடல்





வினோதன் எனும் தமிழ்த்திரைப்படத்தில் இடம்பெற்ற "மேகராகமே மேளதாளமே தாரா-ராதா!" கால பாலகா வாத மாதவா





 எனும் நீண்ட திரைப்படப்பாடல் தான் இந்தியாவின் முதலாவது மாலைமாற்றுப் பாடல் ஆகும். இந்த பாடல் மதன் கார்க்கி அவர்களால் எழுதப்பட்டது. டி.இமான் இசையமைத்துள்ளார்.


No comments