CT

அண்மை பதிவுகள்

அறிவாற்றல் அறிவியல் (Cognitive Science)?

அறிவாற்றல் அறிவியல் அல்லது அறிதிறனியல் (Cognitive Science)என்பது மனதையும் அதன் செயல்முறைகளையும் பற்றிய அறிவியல் ஆய்வு ஆகும்.


அறிவாற்றல் அறிவியலைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளும் முன் காண வேண்டியவை

உளவியல்

நரம்பணுவியல்

மொழியியல்

மெய்யியல் அல்லது தத்துவவியல்

மானிடவியல்

செயற்கை அறிவுத்திறன்




உளவியல் (Psychology)


உளவியல் அல்லது மனோதத்துவத்தின் அடிப்படை ஆய்வு என்பது உள்ளுணர்வு அறியும் ஆற்றல் மூளைச் செயல்பாடுகள் ஆளுமைத்திறன் நடத்தை  ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும்.

அதுமட்டுமில்லாமல் மனித வளர்ச்சி, விளையாட்டு, உடல்நலம், தொழிற்சாலை, ஊடகம், சட்டம் மற்றும் குறிப்பாக சமூக அறிவியல், இயற்கை அறிவியல், மனிதனின் பண்பு, இலக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியமான பங்கு உளவியலை சார்ந்ததாகும்.



நரம்பணுவியல்( Neural science)


நரம்பு மண்டலத்தின் அமைப்பையும் அது எவ்வாறு மனித இயக்கத்தை ஏதுவாக்கிறது என்பதையும் விரிவாக ஆராயும் அறிவியல் ஆய்வாகும்


குறிப்பாக மூளையின் அமைப்பு மற்றும் இயக்கத்தையும் புரிந்துகொள்ள நரம்பணுவியல் முயல்கின்றது.


மொழியியல்(Linguistics)

மொழியை அறிவியல் முறைப்படி ஆராய்வதற்கான ஒரு துறைதான் மொழியியலாகும்.

மொழியியலாளர்கள் மொழியை பாரம்பரியமாக அதன் ஒலியையும் அதன் அர்த்தத்திற்கும் இடையிலான ஒரு ஒற்றுமையை கவனிப்பதன் மூலம் பகுப்பாய்வு செய்கின்றன. அதுமட்டுமில்லாமல் ஒரு மொழியின் வடிவம், பொருள், சூழல் போன்றவற்றையும் மொழியியலாளர்கள் ஆய்வு செய்கின்றன.

மெய்யியல்(Philosophy)

எது உண்மை, எது சரி, எது அறிவு இது மாதிரியான அடிப்படை கேள்விகளை பற்றி ஆழமாக ஆராயும் ஒரு துறைதான் மெய்யியல்.

இந்த மெய்யியலை பற்றி நம்ம தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் கூட எடுத்துக்காட்டிற்காக  உள்ளது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

அதாவது வள்ளுவர் என்ன சொல்கிறார் ன்னா ௭ந்த ஒரு விஷயத்தை யார் மூலமாக கேட்டாலும் சரி அதுல இருக்கிற உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்கிறது தான் அறிவு என்று சொல்லி இருக்காரு.

மானிடவியல்(Anthropology)

மனித இனம் பற்றிய அறிவியல் துறையாகும்.

இந்த துறையானது மனித குலத்தின் சமூகநிலை, பண்பாட்டு நிலை, உயிரியல் நிலை போன்ற வேறுபட்ட நிலைகளில் கடந்த கால மக்களிடமிருந்து சமகால மக்கள் எவ்வாறு வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள உதவுகிறது.

அதுமட்டுமில்லாமல் மக்களின் நடத்தை குடியேற்றவாதம் பண்பாடு இனம் வாழ்க்கைநிலை குடும்பம் மரபுவழி திருமணம் உறவுமுறை மற்றும் பிற பண்பாட்டு மயமாதல் பரிமாற்றம் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளும் துறையின் மூலம் நடத்தப்படுகிறது.

செயற்கை அறிவுத்திறன்(Artificial Intelligence)

மனிதனைப் போலவே சிந்திக்கும் திறன் கொண்ட இயந்திரங்களின் நுண்ணறிவு மற்றும் அதனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கணினி அறிவியலின் ஒரு பிரிவுதான் இந்த செயற்கை அறிவுத்திறன் என்பது.

இதுவரை நாம் கண்ட ஆறு துறைகளை அடிப்படையாகக் கொண்டுதான் அறிவாற்றல் அறிவியல் என்ற துறையே உருவானது.

ஆதலால் தான் அறிவாற்றல் விஞ்ஞானிகளும் இந்த ஆறு துறையை பற்றிய அறிவினைப் பெற வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த அறிவாற்றல் அறிவியல் அல்லது அறிதிறனியல் என்ற துறையின் மூலமாக தான் வருங்காலத்தில் மாபெரும் அறிவியல் வளர்ச்சி ஏற்பட உள்ளது.

ஆதலால் தான் இந்த துறையை பட்டப் படிப்பாகவும் கொண்டு வந்துள்ளனர்.



No comments