CT

அண்மை பதிவுகள்

அறிவாற்றல் முரண்பாடு என்றால் என்ன?

அறிவாற்றல் முரண்பாடு/ஒத்திசைவு (“Cognitive Dissonance”) :


இந்த சொற்களை நாம் கேட்டிருப்பதிற்கான வாய்ப்பு குறைவு தான். ஆனால் அன்றாட வாழ்வில் அனைவரும் அனுபவிக்கிற ஒரு விஷயம்தான் இது.

இதுல சொல்ல வர முரண்பாடு என்னன்னா
நம்ம நம்பிக்கைக்கும், நடவடிக்கைக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகள் தான் இந்த அறிவாற்றல் முரண்பாடு.


அதாவது நாம் நம்புகிற உண்மையான விஷயத்துக்கும் நம்ம நடந்துக்கிற நடவடிக்கைக்கும் உள்ள முரண்பாட்டை கூறுகிறது. இதனால் ஏற்படும் விளைவு என்னன்னா… மன அழுத்தம் மனச்சோர்வு ஏமாற்றம் ஆகியன மன ரீதியாக ஏற்படுத்தும் விளைவு.


எடுத்துக்காட்டாக

  1. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உயிரைக் கொல்லும்.
    இந்த விஷயம் உண்மையானது நம்ப கூடியதும் கூட. அப்படி இந்த விஷயத்தை நம்புகிறவர்களே அவர்களது வழக்கமான நடவடிக்கையாக புகை பிடிப்பதும் மது அருந்துதல் இருப்பதால் அவரது உடலுக்கு மட்டுமல்லாமல் அவரது உள்ளத்திற்கும் சோர்வு மன அழுத்தம் ஏமாற்றம் ஆகியவற்றை அளிக்கிறது.
  2. இயற்கையை பாதுகாப்பது இன்றியமையாதது; மரம் வளர்த்தால் மழை வரும், காற்று தூய்மையாகும் என்பதை நம்புகிற ஒருவர். அவர் ஒரு நான்கு சக்கர வாகனத்தை வாங்கும் பொழுது
    புகையின் அளவைக் கட்டுப்படுத்துகிற எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தி வரும் வாகனத்தை வாங்காமல் சுற்றுச்சூழலுக்கு மாசு படுத்தும் விதமாக வாகனத்தை வாங்குவதும். அவரை அறியாமலேயே எடுக்கின்ற அறிவாற்றல் முரண்பாட்டிற்கான முடிவுதான்.


இந்த முரண்பாட்டினை நாம் குறைத்து கொள்வதற்கான வழி:


• நமது உண்மையான நம்பிக்கைக்கு ஏற்றார் போல் நமது நடவடிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுதல்.


• நம்பிக்கையை வேறுவிதமாக தீர்மானிப்பது:


எடுத்துக்காட்டாக தற்போது நான் வேலை செய்யும் அலுவலகத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் வேலை பறிபோய்விடும் என்று வேறுவிதமாக நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு அப்பழக்கத்தை குறைத்துக்கொள்ளுதல்.


No comments