CT

அண்மை பதிவுகள்

புலனறிவாதம்(empiricism) என்றால் என்ன?


புலனறிவாதம் என்பது உண்மையை எப்படி அறியலாம் என்பதை பற்றிய அணுகுமுறையாகும். இதனை நிரூபணவாதம் என்றும், அனுபவவாதம் என்றும் அழைப்பர்.


அறிவு அனைத்தும் அனுபவத்தால் அடையப்படுபவை என்னும் கோட்பாடு

புலனறிவாதம் ஆதாரத்தையும் அனுபவத்தை முன்னிறுத்துகிறது.


குறிப்பாக புலன்களின் ஊடாக பெறப்படும் அறிவை இது முதன்மைப்படுத்துகிறது.


எடுத்துக்காட்டாக:
எங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு புலியை கண்டேன் என ஒரு அறிஞர் சொல்கிறார் என வையுங்கள் அவர் அறிஞர் என்பதற்காக சொல்வது உண்மை என்று ஆகாது இருப்பதற்கான ஆதாரம் வேண்டும்.


புலனறிவு வாதத்தின் படி மனிதனுக்கு அறிவு என்று சொல்லப்படுவது பெரும்பாலும் அவனுடைய ஐம்பொறிகள் வழியாக வருகின்றது.


எடுத்துக்காட்டாக :
தேன் இனிக்கும் மிளகாய் காக்கும் முள் குத்தும் நெருப்பு சுடும் போன்றவற்றை நாம் ஐம்புலன்களின் வழியாகவே தெரிந்துகொள்கிறோம்.


புலனறிவாதமே அறிவியலுக்கு அடிப்படையாகும். ஏனென்றால் புலனறிவாதம் எப்படி ஆதாரத்தை முன்னெடுக்கிறதோ. அதேபோல அறிவியலும் ஒவ்வொரு கூற்றையும் ஆதாரப்பூர்வமாகவும், பரிசோதனை மூலமாகவும் உறுதி கொண்டே அதனை அறிவாக ஒப்புக்கொள்கிறது.



No comments