CT

அண்மை பதிவுகள்

அல்கோரிதம்(Algorithm) என்றால் என்ன?

Algorithm = படிமுறைத் தீர்வு.


அல்கோரிதம் என்கிற இந்த வார்த்தையை கேட்டவுடன் உங்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் டாபிக்  தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா உண்மையிலேயே அல்கோரிதம் கம்ப்யூட்டர் சயின்ஸ் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல கணிதம் அறிவியல் போன்ற அனைத்திலும் தீர்வு காணும் படிநிலை தான் அல்கோரிதம்.


விளக்கம் :

ஒரு வேலையை செய்வதற்கான வரையறையை உருவாக்கி குறிப்பிட்ட படிநிலைகளுக்குள் செயலாக்கம் செய்து தீர்வு காணும் முறையை எடுத்துரைப்பது தான்அல்கோரிதம்.


எடுத்துக்காட்டாக பாத்தீங்கன்னா கணிதத்தில்


5 எண்களின் சராசரியை காண வேண்டுமென்றால்


  1. முதலில் ஐந்து எண்களை கொடுக்க வேண்டும்

20,22,24,24,20


  1. இரண்டாவது படிநிலையாக 5 எண்களின் கூடுதல் காண வேண்டும்

110


  1. மூன்றாவது படிநிலையாக கூடுதலை 5 ஆல் வகுக்க அந்த எண்களின் சராசரி கிடைத்துவிடும்

110/5= 22


ஆக மொத்தத்தில் அல்கோரிதம் அதாவது படிமுறை தீர்வு என்பது கேள்விக்கான விடையை கண்டறிய எடுத்துக்கொள்ளும் படிநிலைகளே ஆகும்



No comments