புரூஸ் லீ -ன் 15 வாழ்க்கை தத்துவங்கள்
- சுலபமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்யாதீர்கள் கடினமான வலிமையான உள்ளத்திற்கு பிரார்த்தனை செய்யுங்கள்.
- ஒரு புத்திசாலித்தனமான பதிலில் இருந்து ஒரு முட்டாள் கற்றுக் கொள்வதை விட ஒரு புத்திசாலி ஒரு முட்டாள்தனமான கேள்வியிலிருந்து அதிகம் கற்றுக் கொள்ளமுடியும்.
- குழப்பத்தின் நடுவில் வாய்ப்பு உள்ளது.
- விரைவான மனநிலை விரைவில் உங்களை முட்டாளாக்கும்.
- வாழ்க்கையை உங்கள் ஆசிரியர் நீங்கள் தொடர்ந்து கற்றலில் இருக்கிறீர்கள்.
- நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க அதிக நேரம் செலவிட்டால் நீங்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டீர்கள்.
- நீங்கள் வழக்கமாக என்ன நினைப்பீர்கள் என்பது நீங்கள் இறுதியில் என்ன ஆகிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது.
- தோல்விக்கு அஞ்சாதீர்கள் தோல்வி குற்றம் அல்ல ஆனால் குறைந்த நோக்கம்தான் குற்றம் பெரும் முயற்சிகளில் தோல்வி அடைவது கூட மகிமை வாய்ந்தது.
- நீங்கள் ஒருபோதும் காற்றை அழைக்க முடியாது. ஆனால் நீங்கள் ஜன்னலை திறந்து விட முடியும்.
- புத்திசாலி என்று காண்பிப்பதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்காது.
- அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம் குணம் தான் மரியாதையை பெற்றுத் தரும்.
- கவலைகள் அல்லது எதிர்மறை எண்ணங்களுக்கு ஒருபோதும் சக்தியை வீணாக்காதீர்கள் எல்லா சிக்கல்களுக்கும் அதுவே காரணமாகிவிடும் அதை கைவிடுங்கள்.
- நாளைக்கான தயாரிப்பு இன்றைய கடின உழைப்பு.
- பதட்டமாக இருக்காதீர்கள், தயாராக இருங்கள். சிந்திக்காமல் கனவு காணாதீர்கள். உயிருள்ள வரை உயிருடன் இருங்கள்.
- நான் உங்களுக்கு எதுவும் கற்பிக்கவில்லை. உங்களை ஆராய்வதற்கு நான் உங்களுக்கு உதவுகிறேன்.
- புரூஸ் லீ
No comments