புத்தரின் பொன்மொழிகள்..!
நிரந்தரமானது என்ற தோற்றத்தை அளிப்பது எல்லாம் தற்காலிகமானது அவை அனைத்தும் மறைந்துவிடும்.
ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு.
காரணமின்றி விளைவில்லை.
பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.
பறக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால்; முதலில் உங்கள் சுமையை வீசி எறியுங்கள்.
அமைதியை உங்களிடம் தேடுங்கள்; பிறரிடம் தேடாதீர்கள்.
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் தண்டனை.
தோல்வியே அடையாத ஆயுதம் பொறுமை.
கூர்மையான வாள்; கோபத்தில் கூறப்படும் வார்த்தை.
நமது இன்றைய நிலை; நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.
தவறான பாதையில் வேகமாக செல்வதை விட; சரியான பாதையில் மெதுவாக செல்.
தர்மத்தினை தேடிப்போய் செய் உதவியை நாடி வருபவர்களுக்கு செய்.
இங்கே ஆள்பவன் இருக்கும்போதே அதை ஆள வேண்டிய இன்னொருவன் உருவாகிறார்.
செல்வத்தை சேர்த்து வைக்கும் கருமி பாவத்தை மூட்டை கட்டி சேர்த்துவைத்த முடிவில் எல்லாவற்றையும் இழக்கிறான்.
ஆசைக்கும், அன்புக்கும் அடிமையாகாதீர்கள்; ஏனெனில், அவ்விரண்டும் உங்களை அடிமையாக்கி விடும்.
அமைதியாக இருப்பவனை முட்டாள் என்று எண்ணி விடாதே பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.
மூன்று வகையான இன்பம்
உடல் நோயற்று இருப்பது முதல் இன்பம்.
மனம் கவலையற்று இருப்பது இரண்டாவது இன்பம்.
பிற உயிரினங்களுக்கு உதவியாக இருப்பது மூன்றாவது இன்பம்
No comments