CT

அண்மை பதிவுகள்

மாரகம், தாரகம் –ன்னா என்ன?


 ஓர் அலுவலகம் . அதுலே ஒரு தலைமை அதிகாரி . அவர் ரொம்பவும் உண்மையானவர் ... நேர்மையானவர் . அலுவலகத்துலே உள்ள ஒவ்வொரு பொருளையும் ரொம்பவும் பத்திரமா பாதுகாத்து வந்தார் . மேஜை ... நாற்காலி ... குப்பைக்கூடை எல்லாம் அந்தந்த இடத்துலே இருக்கான்னு பார்த்துக்குவார் . நாற்காலியிலே ஒரு கால் உடைஞ்சிருந்தாலும் அதை உடனே பழுதுபார்த்து சரி செஞ்சுடுவார் . அதாவது அவர் எப்படின்னா ... அந்த அலுவலகத்துலே உள்ள ஒவ்வொரு பொருளையும் தன்னுடையதா நினைச்சி பாதுகாத்து வந்தார் . அந்த அதிகாரிக்கு ஒருநாள் திடீர்ன்னு மாற்றல் உத்தரவு வந்தது - Transfer Order .


உடனே என்ன பண்றார் ? தன்னுடைய பெட்டி படுக்கையைக் கட்டிக்கிட்டுப் புறப்பட்டுடறார் . இப்ப அந்த அலுவலகத்துலே உள்ள மேஜையைப் பற்றியோ , நாற்காலியைப் பற்றியோ அவரு கவலைப்படலே . அந்த அலுவலகத்துலே இருந்த வரைக்கும் அங்கே இருந்த எல்லா பொருள்களுக்கும் அவரே பொறுப்பு . அதேவிதமா ... அவர் எல்லாத்தையும் தன்னு டையதா பாவித்து அக்கறையா கவனிச்சுக்கறார் . இதை ' மாரகம் ' - அப்படின்னு சொல்றாங்க .

அவரை அடுத்த ஊருக்கு மாற்றிய உடனே இது எல்லாம் தன்னுடையதில்லே ... சமுதாயத்தைச் சேர்ந்தது ... அப்படிங்கற எண்ணம் வந்துடுது . தான் வெறும் ' பொறுப்பாளி ' மட்டுமே ( Custodian ) என்கிற எண்ணம் உருவாகுது . இதைக் காப்பாற்றுவது மட்டும்தான் என்னுடைய கடமை என்கிற எண்ணத்தோடு செயல்படறார் . இதுவும் ' மாரகம் ' - தான் . ஆனா .... 'தாரகம் ' -ங்கறது வேறே.

அதே அலுவலர் மாற்றலாகிப் போகும்போது வீட்டிலே உள்ள எல்லாத்தையும் கட்டி லாரியிலே ஏத்தறார் . பழைய செருப்பு - துடைப்பம் ... எதையும் விட்டு வைக்கலே ... ! என்ன காரணம் ? எல்லாம் என்னுடையது - ங்கற எண்ணம் . ஆக ... எல்லாம் என்னுடையது -ங்கற எண்ணம் தாரகம் . என்னுடையதில்லை -ங்கற எண்ணம் மாரகம் .

இந்தத் ' தாரகம் ' , ' மாரகம் ' இரண்டிற்கும் இடையிலே தான் மனித வாழ்க்கை ஊசலாடுகிறது -ங்கறது பெரியவர்கள் ( சாயிபாபா ) கருத்து .

எல்லாவற்றையும் நாம் அனுபவிக்கலாம் . ஆனா எதுவும் என்னுடையதில்லை -ங்கற எண்ணம் நமக்கு வரணும் . இருக்கிறதெல்லாம் இயற்கை கொடுத்திருக்கிற பிரசாதம் . அரசாங்கம் கொடுத்திருந்ததை அந்த அதிகாரி காப்பாற்றினார் . பொறுப்புலே இருக்கிற வரைக்கும் இதையெல்லாம் காப்பாற்ற வேண்டியது தனது கடமைன்னு நினைச்சார் அவர் .

போ - ன்னு அடுத்த ஊருக்குப் சொன்னதும் அங்கே இருக்கிற எல்லாத்தையும் உதறிபுட்டுக் கிளம்பிட்டார் . இந்த உலகியல் கடமையை ஒரு யோகமாகச் செய்யணும் . இந்த உலகத்துலே இருக்கிறவரைக்கும் ... என் வீடு ... என் மனைவி ... என் மக்கள் ... இது எல்லாமே இயற்கை அல்லது இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற பிரசாதம் -ன்னு உணரணும் . அப்படிப் புரிஞ்சிக்கிட்டு நம்முடைய கடமைகளைச் செய்யணும் .

எல்லாம் என்னுடையது என்கிற ' மாரகம் ' வந்துடப்புடாது . ஒரு மனிதனுக்கு எது நிரந்தரம் ? எதுவரை இருக்கப் போகிறான் ? யாருக்கும் தெரியாது . அதனாலே வாழும்வரை கடமையாற்றிக் கொண்டே காலம் கழிக்க கழிக்க வேண்டும் . வேண்டும் . எல்லாம் இயற்கை தந்த வரப்பிரசாதம் என்கிற பாவனையோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் .

 

இந்தக் காலத்து அதிகாரி ஒருத்தர் . ஒரு லாரியிலே ஏறிக்கிட்டிருந்தார் . “என்ன சார் விவரம்? '' -ன்னு கேட்டார் அவருடைய நண்பர் ஒருத்தர்.

" எல்லாம் என்னுடையது - ன்னு நினைச்சேன் . அதோட விளைவு இது ! "-ன்னார் அவர் . “ என்ன ... அடுத்த ஊருக்கு மாத்திட்டாங்களா ? " -ன்னார் அவர் . " இல்லேசார் ... என்னை அரெஸ்ட் பண்ணி அழைச்சிக்கிட்டுப் போறாங்க !  அப்படின்னார் இவர் .


தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் படைப்பிலிருந்து குறுந்தகவல்.


No comments