CT

அண்மை பதிவுகள்

நேரத்தை நிர்வகிக்கும் வழிகள்


நேரம் : கடவுள் நம்ம எல்லாருக்கும் பாகுபாடில்லாம கொடுத்த ஒரே விஷயம் இந்த நேரம் தான். ஏழையோ பணக்காரனோ எல்லாருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரந்தாங்க அப்படிப்பட்ட நேரத்த நாம் எப்படி பயன்படுத்தறோங்கறதுல தான் ஒவ்வொருத்தரோட வளர்ச்சியும் அடங்கியிருக்கு.

பயனுள்ள நேர நிர்வாகத்தினை செயல்படுத்துவது பெரிய ரகசியம் இல்லை.

இப்போதே செய்ய வேண்டியது, பின்னர் செய்ய வேண்டியது, ஒருபோதும் செய்யத் தேவை இல்லாதது குறித்து முடிவெடுப்பதில் தான் அடங்கும். இததான் ஆங்கிலத்துல 4d’s of time management –ன்னு சொல்லி விளக்கங்கள் கொடுக்கறாங்க.


செய்(Do)


எளிமையாகச் சொன்னால் செயல்படுங்கள்.

ஒரு வேலையை செய்வதற்கு முன் டேவிட் ஆலனின் இரண்டு நிமிட விதியை பயன்படுத்துங்கள்.

அந்த ரெண்டு நிமிஷத்துல அப்படி என்ன பண்ண முடியும்.

எடுத்துக்காட்டாக சிறு தகவலை பரிமாறி கொள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் அனுப்ப வேண்டியவருக்கு   மின்னஞ்சல் அனுப்பலாம்.

இந்த இரண்டு நிமிட விதிக்கான அடிப்படை என்னவென்றால் ஒரு வேலையை முதன்முதலில் செய்வதை விட சேமித்து வைத்து அதை பிறகு கண்காணிக்க அது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். வேறுவிதமாகச் சொன்னால் இது செயல்திறன் வெட்டு எனலாம்.


ஒத்திவை(Defer)

சில முக்கியமான பணிகளை தற்போதுள்ள நேரத்தில் சமாளிக்க முடியாது என்று நினைப்பதை நீங்கள் பிறகு ஒத்தி வைக்கலாம் அப்படி வைக்கும் போது அதற்கான நேரத்தை நீங்கள் குறித்து வைக்க வேண்டும் இப்பணி எப்பொழுது செய்ய வேண்டும் என்று.

எடுத்துக்காட்டாக குடும்பத்திற்கான நேரம் செலவழிப்பது பற்றி நாம் யோசிப்பது அவசியம் தான் ஆனால் அதை பணி செய்யும் நேரத்தில் யோசிப்பதை தவிர்த்து பிறகு நாளின் இறுதியிலோ அல்லது வாரத்தின் இறுதியில் அதைப்பற்றி சிந்தித்து முடிவு எடுப்பது சிறந்தது.


பிரதிநிதித்துவம்(Delegate)

நீங்கள் ஒரு குழுவின் தலைவராகவோ அல்லது முக்கியப் பொறுப்பில் இருப்பவர் ஆக இருப்பின் உங்கள் குழுவில் சில உறுப்பினர்களுக்கு  பணிகளை  ௭வ்வாறு பகிர்ந்தளிப்பது பற்றி முடிவெடுக்கலாம்.

அதாவது அப்பணியில் நீங்கள் முழுவதுமாக ஈடுபட வேண்டுமானால் அப்பணியை நீங்களே செய்து முடிக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் அப்பணியினை அதுக்கு தகுந்த  உறுப்பினர்களுக்கு அல்லது அப்பணிக்கு சிறந்தவரிடம் ஒப்படைக்க வேண்டும்.


எடுத்துக்காட்டாக

தற்போது பலரும் தங்களின் வேலைகளை அவுட்சோர்சிங் அதாவது பிரீலன்சர் அல்லது அப்வொர்க் போன்ற இணையதளத்தின் மூலமாக அதற்கான தகுந்த நபரை கண்டறிந்து அவரிடம் ஒப்படைத்து அதற்கான பணத்தினை கொடுக்கின்றன. இதனால் அவர்களின் நேரம் சேமிக்கப்படுகிறது.


 நீக்கு(Delete)

இந்தப் பகுதி உங்களுக்கு அவசியம் இல்லாத அல்லது முக்கியத்துவம் இல்லாதவற்றை குறிக்கிறது. எனவே அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை.

ஆகையால் உங்களுடைய அன்றாட பணியிலிருந்து இத்தகைய பணிகளை  நீக்குதல் நன்று.

தினமும் காலையில் நீங்கள் பணியில்  ஈடுபடும் போது பல்வேறு மின்னஞ்சல்களை காண நேரிடும்  அவற்றில் எது தேவை என்பதை ஒவ்வொன்றையும் படித்து நீங்கள் அழிக்க வேண்டிய அவசியமில்லை தேவையில்லாத சில ஸ்பேம் மடல்களை பார்த்தவுடன் அழித்துவிடலாம். மற்றும் மீது தேவையில்லாத சந்தாவில் அதாவது குழுக்களில் இருந்து வெளியேறுவது மிகச் சிறந்த வழியாக இருக்கும்.



2 comments: