CT

அண்மை பதிவுகள்

குவியவாதம்(Focalism) என்றால் என்ன?


குவியவாதம்(Focalism) என்பது அறிவாற்றல் சார்புடைய கருத்துகளை பற்றியதாகும்.


Focalism இது ஒரு இலத்தின் மொழிச்சொல் இதனை தமிழில் குவியவாதம் என்றழைப்பர்.அதாவது வாதத்தை ஒரு புள்ளியில் குவிக்கிறது/நிலைநிறுத்துகிறது.

குவியவாதமானது எடுத்துரைப்பது என்னன்னா ஒரு மனுஷனோட ஆரம்பகட்ட தகவலே அவனோட அடுத்தடுத்த முடிவை எடுக்க பெரிதும் உறுதுணையாக உள்ளது.


இதை நங்கூர விளைவு(Anchoring Effect) என்றும் அழைப்பர்.



நங்கூரம் ஆனது எப்படி ஒரு கப்பலை நிலை நிறுத்துவதற்கு உதவுதோ அதுமாதிரிதான் மனிதனின் ஆரம்பகட்ட தகவல்தான் அவனுடைய அடுத்த எடுத்த முடிவினை ஒரே புள்ளியில் இணைத்து நிலைநிறுத்துகிறது.


இதற்கு எடுத்துக்காட்டு நங்கூர விளைவைப் பற்றி படித்த முதல் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டேனியல் கான்மேன் ஒரு ஆய்வு நடத்தினார்.



அந்த ஆய்வில் அஞ்சு வினாடிக்குள்ள 1x2x3x4x5x6x7x8 கணக்கிட கேட்டுக்கொண்டார் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முழு பதிலை கணக்கிட இயலாமல் தோராயமாக ஒரு பதிலை கொடுத்தனர் 512.


அடுத்தகட்டமாக வேறு சிலரை அதே நேரத்திற்குள்  8x7x6x5x4x3x2x1 கணக்கிட  சொன்னார் ஒரு  தோராயமான பதில் கிடைத்தது 2052. (உண்மையான பதில் 40320.)


இந்த ஆய்வில் இரண்டு முறை கொடுத்த எண்களும் ஒன்னு தான் ஆனா கிடைத்த பதில் வந்து வேற வேற.


காரணம் ௭ன்னன்னா அவங்களுக்கு முதல்ல மனசுல பதிஞ்ச என்ன வெச்சுதான் கணக்கை போடுறாங்க  அதனால நம்ம மனசுல முதற்கட்டமா கொடுக்கிற தகவல் தாங்க அடுத்தடுத்த முடிவுக்கே காரணமாகுது.


இதுதாங்க குவியவாதம்.


இந்த  குவியவாதம் எனப்படும் நங்கூர விளைவே மனோதத்துவத்துல இருந்துதாங்க வந்துச்சு.


தொடர்ச்சியான தூண்டுதல்கள் தீர்மானிக்கும்போது முதல் மற்றும் கடைசி தூண்டுதல்தான் ஒப்பிவிடுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கால வாழ்க்கையும் பெரும்பாலும் வணிகத்தில் பயன்படுத்தப்படும் முறை தாங்கக்கூடிய வாதம் எப்படின்னு பாக்குறீங்களா..


உலகத்துக்கே தெரிஞ்ச ஸ்டீவ் ஜாப்ஸ் அவரோட ஐ-பாடு விற்பனைக்கு அறிமுகப்படுத்தும்போது  அதோட  மதிப்பு என்னன்னா 999 டாலர்கள் ன்னு அறிவித்தார் அத கேட்ட மக்கள் எல்லாம் கொஞ்சம் விலை அதிகமாக தோணுச்சு.


அப்போ ஸ்டீவ் ஜாப்ஸ் மறுபடியும் சொல்றாரு நான் உங்களுக்கு கொடுக்கப் போற விலை வெறும் 499 டாலர்கள் மட்டுமே ...


அவ்வளவுதாங்க மக்கள் மனசுல ஆயிரம் டாலர் மதிப்புள்ள பொருள் 500 டாலருக்கு கிடைக்குது என்று எல்லாரும் வாங்க ஆரம்பிச்சாங்க.



ஐபோன் ,ஐபாட் மட்டும் இல்லைங்க மத்த எல்லா இடத்திலயும் டிஸ்கவுண்ட் அதாவது தள்ளுபடி என்கிற பெயரிலும்.


வாராந்திர சலுகை, மாத சலுகை-ன்னு பேருல இன்னைக்கு அமேசான்,ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்களும்  அதிக விலையை மக்கள் மனசுல நிறுத்தி பிறகு அதை குறைவாக காட்டி மக்களை வாங்க செய்வதுதான்


இந்த நங்கூர விளைவு (அ) குவியவாதம் ஆகும்.



2 comments: