CT

அண்மை பதிவுகள்

பார்க்கின்சன் விதி கூறுவது என்ன?


பார்க்கின்சனின் விதி (Parkinson’s law) :


நாம ஒரு வேலைய செய்றதுக்கு எவ்ளோ நேரத்தை ஒதுக்கறமோ. அந்த வேலை முடிவதற்கு அது அவ்ளோ நேரத்தை எடுத்துக்கும்.


எடுத்துக்காட்டுகள் :


  • நம்ம வீட்ட சுத்தம் செய்து முடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கினால் அந்த வேலையை ஒரு மணி நேரத்தில் முடிப்போம். அதே வேலையை ஒரு நாள் முழுசும் பண்ணனும்னு நினைச்சா அந்த வேலை முடிய  ஒருநாள் ஆகிடும்.

  • உங்க நிறுவனத்தில் ஒரு வேலைய உங்ககிட்ட கொடுக்கிறார்கள் அந்த வேலைய ஒரு வாரத்தில் முடித்து கொடுக்க சொல்லி  கேட்கிறார். நீங்களும் ஒரு வாரத்தில் முடிச்சு கொடுப்பீங்க. அதே வேலையை முடிக்க உங்களுக்கு ஒரு மாதம்  கொடுத்தாங்கனா அந்த வேலையை முடிக்க நீங்க ஒரு மாதம் எடுத்துக்குவீங்க.

இதுதாங்க நாம ஒரு வேலையை முடிக்க எவ்வளவு நேரத்தை ௭டுக்கிறோமோ அந்த நேரத்துக்குள்ள அந்த வேலைய முடிச்சுடுவோம்-ன்னு பார்க்கின்ஸன் சொல்கிறார்.





வேலைக்கான காலக்கெடு(deadline) நாள் அதிகரிக்க அதிகரிக்க வேலையின் வேகம் குறையும்.

Chart Parkinson





  • இந்த விதியை நம்ம பள்ளிப்பருவத்தில் கூட பயன்படுத்தியிருப்போம். எப்படினா நம்ம பள்ளி தேர்வுக்காக படிக்கறதுக்கு சில நாட்கள் விடுமுறை விடுவாங்க. ஒரு பத்து நாள் விடுமுறை விடுறாங்க-ன்னு வச்சுக்கோங்க அந்தப் பத்து நாளும் படிக்கணும்னு எண்ணம் இருக்குமே தவிர அதற்கான நேரத்தை ஒதுக்க மாட்டோம். கடைசியா ஒருநாள் இருக்கும் போது நாம காலக்கெடு அதாவது டெட்லைன்  வைச்சு படிக்க ஆரம்பிப்போம். நாமளும் ஒழுங்கா படிச்சு முடிச்சுட்டு அடுத்த நாள் பரீட்சையில தேர்ச்சியடையற மாதிரி  முடிச்சிட்டு வருவோம்.


ஒரு வேலைக்கான நியாயமான நேரத்தை ஒதுக்கும் போது அந்த நேரத்துக்குள்ள அந்த வேலைய எளிதாக முடிக்கலாம். அதாவது வேலைக்கு பொருந்தாத காலக்கெடு குறைவாக கொடுப்பதால் வேலை முடியும் ஆனால் நீங்க உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிக் கொள்ள வேண்டிய நிலை உண்டாகும்.




காலக்கெடு இல்லாத எந்த வேலையும் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவுதான் என்றும் கூறுகிறார்.





இது பல நேரங்களில் ஒரு நிறுவனத்தில் அதிகாரத்துவத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.





அதுபோல தனிமனித வளர்ச்சிக்கும் இந்த விதி பெரிதும் பயனளிக்கிறது.





இந்த விதி நேர மேலாண்மையில்(Time Management) முக்கியமான ஒன்று.


No comments