தரவுத்தளம் என்றால் என்ன? || Database in tamil
தரவுத்தளம்
கணினியில் சேகரித்த தரவுகளின் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுப்பே தரவுத்தளம்(Database) ஆகும். இவை கட்டுக்கோப்பான முறையில் தரவுகளை சேகரிக்கின்றன.
தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு (DBMS)ஆனது பிற மென்பொருட்களிலிருந்து தரவு தளத்திற்கு தரவுகளை எளிதாக பரிமாறிக் கொள்வதற்கான வழிவகை செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி தரவுகளை உருவாக்கவும், சேமிக்கவும், அழிக்கவும், புதுப்பிக்கவும் இதில் வழிவகை உள்ளது
இதன் பரவலான பயன்பாட்டால் இதற்கு அடுத்த படிநிலையாக தொடர்புசால் தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு(RDBMS) கொண்டுவரப்பட்டது. தற்காலத்தில் பயன்படுத்தப்படும் நிறைய தரவுதளங்கள் இந்த வகையைச் சேந்தவையே.
(இவை தொடர்புடைய மாதிரிகளை கொண்ட தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு கொண்டதாகும்.)
தொடர்புசால் தரவுதளங்களை பற்றி ஐபிஎம் இல் பணி புரிந்த E.F. Codd என்பவரால் 1970 களில் விபரிக்கப்பட்டு, பின்னர் ஆக்கப்பட்டு, தற்சமயம் ஒரு சீர்தரமாக இருக்கின்றது.
இவையே தரவுகளை முதன்முதலில் தொடர்கள் உள்ள அட்டவணைகளாக ஒழுங்குபடுதின.
இவை சீக்வல் (கட்டமைப்புள்ள வினவு மொழி) கட்டளைகளை ஏற்று செயற்படுத்தகூடியவை.
பிரபலமான தொடர்புசால் தரவுத்தள மேலாண்மை அமைப்பு மென்பொருட்கள்:
மை எஸ்க்யூ எல்
எம் எஸ் எஸ் க்யூ ௭ல்
ஆரக்கிள்
ஐபிஎம் டிபி2
எளியவையாக...
பைல் மேக்கர்
எம்எஸ் அக்சஸ்
இன்றைய காலத் தரவுத்தள அமைப்பின் பயன்பாடு
வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள பெரும்பான்மையான நிறுவனங்களின் வர்த்தகங்கள் தரவுகளை நம்பியே செயல்படுகிறது.
ஒரு பெரிய நிறுவனமானது தனது சேவைகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க இன்றியமையாத பயனர்களின் தகவல்களை தரவுத்தளங்கள் கொடுக்கின்றன.
இதுபோல ஒவ்வொரு நிறுவனமும் அதற்கு தேவையான தரவுகளை மட்டும் தரவுத்தளத்தில் இருந்து பிரித்து தனது வாடிக்கையாளர்களை சென்றடைகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் தரவுகள் இல்லாத வர்த்தகம் என்பது மிக அரிதான ஒன்றாகும்.
விரிதாளிலோ அல்லது சாதாரண கோப்பாகவோ தரவுகளை சேமிப்பதில் உள்ள இடையூறுகள்
தரவின் தரத்தை உறுதிப்படுத்த இயலாது.
மீள்வரும் தரவுகள்/மீண்டும் அதே தரவுகள் வரும் வாய்ப்பு
தரவின் அளவு, தரவை திரும்பப்பெறுதல், தரவை வடிக்கட்டி எடுத்தல், தரவுத் தேடல்கள் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்கள்.
அனுமதியளிக்காத பயனர்கள் அணுகுவதில் இருந்து பாதுக்காத்துக் கொள்ளுவதில் பாதிப்பு.
ஆகிய காரணங்களால் தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு சிறந்ததாகிறது.
தமிழ் | English |
தரவுத்தளம் | Database |
மேலாண்மை அமைப்பு | Management System |
தொடர்புசால்/தொடர்புடைய மாதிரி | Relational Model |
விரிதாளில் | Sheets |
கோப்பு | File |
மீள்வரும் தரவுகள் | Redundant Data |
simply good...
ReplyDelete