குறியாக்கவியல் என்றால் என்ன? || Cryptography in tamil
குறியாக்கவியல்
குறியாக்கவியல் அல்லது மறைப்பியல் (Cryptography)என்பது ஒரு தகவலை எவ்வாறு மறைத்து பரிமாறிக்கொள்வது என்பதைப் பற்றிய இயல் ஆகும்.
இந்த மறைப்பியலானது கணிதம், கணினி மற்றும் பொறியியல் ஆகிய பல துறைகளில் பயன்பாட்டில் உள்ளது.
விளக்கம்:
மறைப்பியல் என்பது ஒரு செய்தியை மறைத்து குறியீட்டு வார்த்தைகளாய் மாற்றி பிறகு மீண்டும் பழைய செய்தியை கொண்டு வரும் முறையாகும்.
இம்முறையில் முக்கியச் செயல்பாடாக மறையாக்கம் மற்றும் மறை விலக்கம் பயன்படுகிறது.
தகவல்களை மறைத்த குறியீடுகளை மறைக் குறியீடு என்பர். இதைப் படிக்க முடியாத தகவல்களாக இருக்கும்.
இதனை உடைக்கும் முறைக்கு மறைப்பியல் பகுப்பு அல்லது மறையீட்டியல் பகுப்பு என்று பெயர்.
மறையாக்கம் என்பது பொதுவாக ரகசிய தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படுவது.
ஒரு செய்தியை கீ எனப்படும் சிறப்பு செயல் முறையை பயன்படுத்தி தகவலை மாற்றியமைக்கும் முறையாகும்.
இதனை சிறப்பு அறிவு கொண்டவர்களைத் தவிர வேறு யாராலும் படிக்க இயலாது. இது சைபர் டெக்ஸ்ட் எனப்படும்.
இத்தகைய குறியீட்டு தகவலை மறை விலக்கம் அல்லது குறி விலக்கம் செய்வதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களால் செய்தியை எளிதாக காண இயலும்.
இன்றைய கணினி உலகில் தரவுகளைப் பாதுகாப்பான முறையில் பரிமாற்றம் செய்வதற்கு மறையாக்கம் மிக அவசியமான ஒன்றாகிறது.
தமிழ் | English |
குறியாக்கவியல் / மறைப்பியல் | Cryptography |
மறையாக்கம் / குறியாக்கம் | Encryption |
மறை விலக்கம் / குறி விலக்கம் | Decryption |
மறைக் குறியீடு | Cipher Text |
மறைப்பியல் பகுப்பு | Crypt-Analysis |
👍🏾👍🏾💐
ReplyDelete