CT

அண்மை பதிவுகள்

பிட் மற்றும் பைட் என்றால் என்ன? || Bit and Byte in tamil


பிட் :





பிட்(BIT)  என்ற சொல்லானது (Binary digIT) பைனரி டிஜிட் என்பதிலிருந்து தோற்றம் காண்கிறது. இதுவே ஒரு தகவலின் அடிப்படை அலகு.





பிட் என்பது 2 அடியாக கொண்டது. இதனை சுருக்கமாக b என்று குறிப்பர்.





பிட்டில் 0,1 என்ற இரண்டு பெறுமானங்கள் மட்டுமே காணப்படும்.





பைட் :





பைட்(Byte) என்பது (8 bits) எட்டுப் பிட்டுகளால் ஆனது இதனை பொதுவாக ஆக்டட் (Octet)என்றும் கூறுவர். இதனை சுருக்கமாக B என்று குறிப்பர்.





நிபில்(Nibble) என்பது நான்கு பிட்டுகளால் ஆனது இதனை half byte அல்லது quad bits என்று கூறுவர்.





ஒரு கணினியில் உரையின் ஒரு எழுத்தை குறியாக்கப் பயன்படும் பிட்களின் எண்ணிக்கையே பைட் ஆகும். இந்த காரணத்திற்காக இது பல கணினி கட்டமைப்புகளில் நினைவகத்தின் மிகச்சிறிய முகவரி அலகு ஆகும்





இந்த பைட்ஸ் ஆனது பல்வேறு நிலைகளில் ஒவ்வொரு அளவுகளில் காணப்படும்போது இதன் பெறுமானங்கள் வித்தியாசப்படுகிறது.





1024 BytesKilo Byte(KB)
1024 KBMega Byte(MB)
1024 MBGiga Byte(GB)
1024 GBTera Byte(TB)
1024 TBPeta Byte(PB)
1024 PBExa Byte(EB)
1024 EBZeta Byte(ZB)
1024 ZBYotta Byte(YB)




 அதற்கான அளவினைப் பொறுத்து புதிய பெயருக்கு அடைமொழிகள் வழங்கப்படுகிறது.





இருப்பினும் அலகு முறையில் ஒரு குழப்பம் உள்ளது.





கணினியில் காணப்படும் சீரற்ற அணுகல் நினைவகம்(ரேம்/RAM)





ரேமின் பெருமானம் ஆனது இரண்டின் அடுக்கு பத்தினை அடிப்படையாக கொண்டதாக உள்ளது





எனவே ஒரு கிலோ பைட் என்பது 1024 பைட்டாகவே சொல்லப்பட்டது





அதே சமயத்தில் கணினியில் காணப்படும் வன்தட்டுகள்,இணைய இணைப்பின் அளவை கூட “கே பி பி எஸ் (Kbps)”  Kilo bits per second ல் உள்ள K ஆனது ஆயிரத்தை குறிக்கிறது.





ஒரே துறையில் வெவ்வேறான அளவில் அளவுகளை சொல்வதற்கான ஒரே அலகு குறியீட்டை பயன்படுத்துவது மிக கடினமான ஒன்றாக உள்ளது.ஆதலால் 1998ஆம் ஆண்டு ஒரு முடிவு எடுக்கப்பட்டது பல நியமங்களை வகுக்கின்ற அமைப்புகளால் அலகு முறைகள் வகுக்கப்பட்டன





அதன்படி 1000 பைட் என்பதை குறிக்க KB(Kilo Byte) என்றும் 1024 பைட் என்ற அளவை KiB(Kibi Byte) என்று குறித்து வேறுபடுத்திக் கொள்ளலாம்.


No comments