ஊடல் கூடல் | சிறுகதை
சண்டையும் சமாதானமும்... |
காலையில் நான் எழுந்து இருக்கறதுக்கு முன்னாடியே அவ எழுந்து எனக்கு மெசேஜ் அனுப்பி வைப்பா ஆனா இன்னைக்கு அனுப்பல ஏனா நேத்து நாங்க போட்ட சண்டைதான் காரணம்.
காரணமே இல்லாம சண்டை போடுறது தாங்க காதல். ஆனா அது சீக்கிரமே சமாதானம் ஆகிடனும்.
சரி அப்புறம் சமாதானப்படுதிக்கலாம் அப்படின்னுட்டு நானும் போன வச்சுட்டு ஆபீஸ்க்கு ரெடி ஆயிட்டு இருந்தாங்க.
திடீர்னு பார்த்தா அவ கிட்ட இருந்து மெசேஜ் வந்திருந்தது இன்னைக்கு ஆபீஸ் லீவ் போடு அப்படினுட்டு. சேரி சமாதானப்படுதானும் ந லீவ் போட்டு தான் ஆகணும் அதனால் நான் லீவ் போட்டுட்டு, அவ வீட்டுக்கு வர சொல்லி இருந்தா நான் அங்க போனேன்.
எனக்கு பிடிச்ச ரோஸ் கலர் டிரஸ் போட்டுட்டு அவ வந்திருந்தாள். அந்த ரோஸ் கலர் டிரஸ் ல அவ அவ்வளவு அழகா இருந்தா. அப்பயே அவ கூட சமாதானம் ஆகலாம் அப்படின்னு நினைச்சேன். ஆனா அவ வந்து சமாதானப்படுதட்டும் அப்படின்னு விட்டுட்டேன். அது அவளுக்குத் தெரிஞ்சிடுச்சு.
சரினு பைக்கில் உட்கார சொன்னேன் எப்பயுமே என் கூட நெருக்கமாக உட்காரவ இன்னிக்கி டிஸ்டன்ஸ் விட்டு உட்கார்ந்தாள். சரி இவளை எப்படி சமாதானப்படுத்துவது யோசிச்சிட்டு இருக்கும்போதே அவர் பைக்க அவள் பிரென்ட் வீட்டுக்கு விடச் சொன்னா.
சரிதான் போ இன்னிக்கு சமாதான படுத்தன மாதிரி தான் அப்படின்னு நினைச்சிட்டு நானும் அவ பிரெண்ட் வீட்டுக்கு வண்டியை விட்டேன் அங்க போய் பார்த்தா அவ பிரண்டுக்கு உடம்பு சரி இல்ல நாங்க ரெண்டு பேரு சேர்ந்து நலம் விசாரிச்சிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
கிளம்பும்போது பார்த்தா மணி 11 இருக்கும் சரி அப்படியே வெளியே கூட்டிட்டு போலாம் அப்படின்னு நினைச்சிட்டு வண்டி எடுக்கும் போது எங்க போற அப்படி சொல்லி கேட்டா இப்ப என்ன சொன்னாலும் சமாதான அவானு எனக்கு தெரியல அதனால சரி நானும் கோயிலுக்கு தான் போறோம் அப்படின்னு சொல்லிட்டு கோயிலுக்கு போனோம்.
கோயிலுக்கு போனா சாமி கும்பிட்டு எப்பயும் அவர்தான் எனக்கு திருநீர் வைத்துவிடுவா ஆனா இன்னைக்கு வைத்து விடவில்லை.
நான் பாவமா மூஞ்சிய வெச்சுட்டு அவளையே பார்த்தேன் அவ திரும்பி பார்த்து நான் வச்சு விடமாட்டேன் நீயே வச்சுக்கோ அப்படின்னு சொல்லிட்டு அவ பாட்டுக்கும் கோவமா போயிட்டாங்க. நான் என்ன பண்றதுன்னு தெரியாம சரின்னு சொல்லிட்டு அவ பின்னாடியே போனேன்.
சரின்னு போய் பைகை எடுக்கும்போது டைம் பார்த்தால் மணி ஒன்று ஆயிருச்சு சாப்பிடலாமா என்று கேட்டேன் அவ அதுக்கு எப்போ பார்த்தாலும் தின்னுகிட்டு தான் இருப்பியா அப்படின்னு சொல்லி கேட்டா எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல. சரியா அப்படின்னு சொல்லிட்டு வண்டி ஸ்டார்ட் பண்ணிட்டு அவகிட்டயே எங்க போறதுன்னு கேட்டேன் அவ ஹோட்டலுக்கு போ அதுதான் கேட்டுட்டு இல்ல அப்புறம் என்ன அப்படின்னு சொல்லிட்டு மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு உட்கார்ந்து கிட்டா.
நான் கண்ணாடி வழியாக பார்த்து விட்டு சரி உனக்கு எங்கே போகும் சொல்லு நாங்க கூட்டிட்டு போறேன் அப்படின்னு சொல்லி சொன்னேன் அதுக்கு இல்ல சாப்பிட்டதுக்கு அப்புறம் எங்க வேணா போகலாம் நீ பசி தாங்க மாட்ட அப்படின்னு சொன்ன .
எவ்வளவுதான் சண்டை போட்டாலும் எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது அப்படியும் தெரிந்து வச்சிருப்பா. அவளை மிஞ்ச வேறு யாரும் இல்ல. சரி அவளை எப்படியாவது சமாதானப் படுத்திவிடலாம் அப்படின்னு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனேன் அங்க போயி சாப்பிடும் போது அவளுக்கு நான் தான் எப்பவுமே ஊட்டி விடுவேன் இன்னைக்குன்னு பார்த்து ஆல்ரெடி சண்டை வேற போட்டு இருக்கோம் நாம ஏதாவது சொன்னால் சண்டைக்கு தான் வருவா எனக்கு நல்லாவே தெரியும் சரி நானும் ஆர்டர் பண்ணிவிட்டு கம்முனு உட்கார்ந்து இருந்தேன்.
நாங்க ஆர்டர் பண்னதும் வந்துடுச்சு அப்புறம் நான் சாப்பிட போனேன் அவன் என் மூஞ்சியை பாத்து கிட்டு இருந்தா நான் என்ன அப்படின்னு கேட்டேன் அவ எனக்கு எப்பவும் நீ தான் ஊட்டி விடுவா இன்னைக்கு என்ன அப்படின்னா கேட்டா.
நான் உடனே கோயிலில் நடந்தது கேட்டேன் நான் கோவமா இருந்தா நீ சமாதானப்படுத்த மாட்டியா அப்படின்னு சொல்லி கேட்டா எனக்கு அதுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.
ஏன்னா இதுவரைக்கும் நாங்க சண்டை போடும் போது எல்லாம் என் மேல தப்பு இருந்தாலும் அவ தான் என்ன சமாதானப்படுத்துவா. சரி வா ஊட்டி விடுறன் அப்படின்னு சொல்லி கூப்பிட்டேன் அதுக்கு அவ மறுபடியும் கோவமா இருந்தா எனக்கு அவளைப் பார்த்ததும் சிரிப்பு வந்துருச்சு சரி வா பாப்பா நான் ஊட்டி விடுறேன் அப்படின்னு கூப்பிட்டேன் உடனே திரும்பி இனி சண்டை எல்லாம் போட கூடாது அப்படின்னு சொல்லி மூஞ்சியை குழந்தையாட்டம் வச்சுகிட்டு கேட்டா எனக்கு பதில் சொல்வதைவிட சிரிப்பு தான் அதிகமா வந்துச்சு சிரித்துக் கொண்டே சரி வா வா அப்படின்னு சொல்லி அவள கூப்பிட்டு ஊட்டி விட்டேன் அவளும் சரி என்று சொல்லி விட்டு சாப்பிட்டு இருந்தா.
சாப்பிட்டுவிட்டு பில்லு கொடுக்க எந்திரிச்சேன் அவர் இருந்துகிட்டு பில்ல நான் கொடுக்கிற நீ கம்முனு இரு நான் தான் உன்னை வெளியே கூட்டிட்டு வந்தேன் அப்புறம் என்ன அப்படின்னு சொல்லிட்டு கொடுக்க போயிட்டாள் நான் சேரி சண்டை போட வேண்டாமே அப்படின்னுட்டு பைக் எடுக்கப்போனன்.
பில் கொடுத்திட்டு பின்னாடியே வந்த பின்னாடி வந்ததும் பைக் பார்க்கிங் வந்தால் யாருமே அங்கு இல்லை நான் அவளையே பாத்திட்டிருந்தேன் அவளுக்கு தெரிஞ்சு போச்சு நான் என்ன பண்ண போறேன் அப்படின்னு. உடனே அவ பைக்கை எடு நாம கிளம்பலாம் அப்படின்னு சொல்லி சொன்னாள். பயபுள்ள உஷாரா தான் இருக்கு அப்படி நினைச்சுகிட்டு நானும் சிரிச்சுகிட்டே வண்டி எடுக்க போன உடனே பின்னாடி இருந்து அவ எனக்கு கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்தா. நான் உடனே திரும்பி அவளை பார்த்தேன் அவ இதுக்குத்தானே அப்படி பார்த்தா என்ன அப்படின்னு சொல்லி கேட்டா நான் அவருக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தேன்.
வண்டி எடு போலாம் அப்படின்னு சொல்லி சொன்னா சரி நானும் கிளம்பலாம் அப்படின்னு சொல்லிட்டு வண்டி எடுத்துட்டு நானும் அவளும் கிளம்பி வந்துட்டு இருந்தோம். அப்புறம் ஜூஸ் கடையில் ஜூஸ் குடிக்கலாம் என்று வண்டியை நிறுத்தினேன். நான் அவளோட கைய பிடிச்சிட்டு ஏன் நான் கேட்கும் போதே குடுக்க மாட்டியா அப்படின்னு சொல்லி கேட்டேன் அதுக்கு அவ என்ன என்று சொல்லி கேட்டா ஏன் உனக்கு தெரியாதா அப்படின்னு சொல்லி கேட்டேன். உன்ன பாக்கும்போது கோவமா வந்தது ஆனால் நீ மூஞ்சியை பாவமா வச்சுக்கிட்டு இருந்த எனக்கு ஒரு மாதிரி ஆயிறுச்சு அதுதான் கொடுத்தேன் னு சொன்னா. நான் சிரிச்சுகிட்டே அவளை திட்டினேன் லூசு பைத்தியம்னு அவளோ சிரிச்சுகிட்டே கேட்டுகிட்டு இருந்தா. இவ்வளவுதாங்க எங்களோட சண்டை.
காதல்னா சண்டை போடணும் ஆனால் அந்த சண்டையை காரணம் காட்டி பிரிஞ்சிட கூடாது. ஏனென்றால் சண்டை போடும்போது மட்டும் தான் நாம இன்னும் அவர்களை அதிகமாக நேசிப்போம். காதலில் சின்ன சின்ன சண்டைகள் தான் அவங்களுக்கு இடையில இருக்க நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கும். அதனால அடிக்கடி சண்டை போடுங்க.
இப்படிக்கு காதலின் காதலன்
@இளா
No comments