CT

அண்மை பதிவுகள்

தரவு பாதுகாப்பு என்றால் என்ன?


தரவு பாதுகாப்பு(Data Security) என்பது மதிப்புமிக்க தகவல்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் செயலாக்கம் அல்லது தொழில் நுட்பமாகும். அதுமட்டுமின்றி தரவுப் பாதுகாப்பு என்பது தரவுத் தளங்கள், வலைத்தளங்கள் மற்றும் கணினிகளை அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து தடுக்க பயன்படுத்தப்படும் பாதுகாப்பு  நடவடிக்கைகளை குறிக்கிறது.





ஒரு நிறுவனம் சேகரிக்கும், சேமிக்கும், நிர்வாகிக்கும் தரவானது ஹேக்கருக்கான தங்கச்சுரங்கம் ஆகும். ஏனெனில் அத்தகைய தரவுகளின் பாதுகாப்பை வைத்து அந்நிறுவனத்தின் நற்பெயர்  மற்றும் நிதி ஆரோக்கியத்திறன் உறுதி செய்யப்படுகிறது.





தரவு பாதுகாப்பிற்காக பொதுவாக அனைவரும் எதிர்கொள்ளும் முறையானது ஒரு அங்கீகாரத்தை பயன்படுத்துவதாகும்.





எடுத்துக்காட்டாக: கணினியானது தரவுக்கான அணுகலை வழங்கப் படுவதற்கு முன்னரே அடையாளம் சரிபார்க்கப்படும் பயனர்களின் கடவுச்சொல்,  குறியீடு பயோமெட்ரிக் தரவு போன்ற வழிகளை தரவு பாதுகாப்பிற்காக வழங்குகிறது.





தரவு பாதுகாப்பிற்கான சில வழிகள் குறியாக்கம், காப்பு பிரதிகள், தரவு மறைத்தல்...





குறியாக்கம்:





தரவு பாதுகாப்பு தொழில்நுட்ப நடவடிக்கையில் முக்கியமான ஒன்று குறியாக்கம் ஆகும்





குறியாக்கம் எனப்படும் செயலாக்கமானது, ஒரு செய்தி அல்லது ஒரு கோப்பின் தரவுகளை வேறொரு தரவுகளாக மாற்றும் முறை அந்த வகையான தரவுகள் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய வழிமுறை செயலாக்கம் தான் குறியாக்கம் ஆகும்.





தொழில்நுட்பம் மூலம் தரவு மென்பொருள்கள், வன்பொருள்கள் மற்றும் வட்டுகள் குறியாக்கம் செய்யப்படுகின்றன இதனால் தரவுகளை அங்கீகரிக்கப்படாத பயனாளர்கள் மற்றும் ஹேக்கர்கள் படிக்க முடியாது.





தரவு-பிரதிகள் காப்பு :





காப்பு பிரதிகள் என்பது தரவுகளை நகலெடுப்பதன் மூலமாக தரவு இழப்பு நேரிடாமல் காக்கலாம். தரவு இழப்பானது பல்வேறு விதங்களில் நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக நச்சு நிரல்கள் மூலமாகவோ அல்லது வன்பொருள் செயலிழப்பு மூலமாகவோ கோப்புகள் சீர்கேடு அடைவது மற்றும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பு இவற்றிலிருந்து தரவுகளை பாதுகாக்க பயன்படுத்தும் நுட்பமே தரவு காப்பு எனப்படும் டேட்டா பேக்கப் ஆகும்.





தரவினை மறைத்தல் :





தரவை பயன்படுத்துவதில் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகள் அல்லது அனுமதியில் கவனம் செலுத்துவது பற்றியது. தரவு மறைத்தலானது ஒரு வித செயல்முறை அது மட்டுமன்றி இது ஒரு நவீன நுட்பம் ஆகும் .





இந்த நுட்பத்தின் கீழ் உள்ள தரவுகள் அனைத்தும் எப்போதும் தனிப்பட்ட ஒன்றாகவும் அணுக முடியாததாகவும் இருக்கும்.





தமிழ்English
தரவுData
அணுகல்Access
அங்கீகாரம்Authentication
கடவுச்சொல்Password
குறியீடுPIN
குறியாக்கம்Encryption
காப்பு பிரதிகள்Data Backups
தரவு மறைத்தல்Data Hiding
கலைச்சொல் பட்டியல்





No comments