CT

அண்மை பதிவுகள்

ஜாக்கி சானின் அனுபவ மொழிகள்



ஜாக்கி சானின் அனுபவ மொழிகள்

jackie's quotes

துவக்கத்தால் துவளாதே :
ஜாக்கி தனது துவக்க காலத்தில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தியவர். இன்றைக்கு ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்.

செய்வதை சிறப்பாக செய் :
      ஆரம்ப காலத்தில் ஸ்டண்ட்களில் உயிரைக்கொடுத்து செயல்பட்டார். அது வில்லி சான் என்பவரின் கவனத்திற்கு  திரும்பியது. பிறகு, நாயகனாக வாய்ப்பு கிடைத்தது.

சுயத்தை நம்பு :
     ஆரம்ப கால படங்களில் அவரது சண்டைக் காட்சிகள் மற்ற நடிகர்களிலிருந்து மாறுபடவில்லை. பிறகு தனக்கென ஒரு பாணியை உருவாக்கினார் சண்டைக் காட்சிகளில் நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் விழிக்கு விருந்தளித்தார்..

உடைவது உன்னதம் பெறவே :
      ஜாக்கியின் உடலில் உடையாத எலும்புகள் இல்லை. காப்பீட்டு நிறுவனங்களே கையெடுத்து கும்பிட்டு அனுப்புகிற அளவுக்கு உடம்பில் எல்லா பாகங்களும் அடி கண்டுள்ளது. ஜாக்கி சானுக்கு ஒரு முறை மண்டையோட்டில் அடிபட்டு எட்டு மணி நேர சிகிச்சைக்குப் பின்னரே  அவரை மீட்டனர். அந்த துளையை செயற்கை பூச்சு கொண்டு அடைத்து விட்டு அவர் மீண்டும் நடிக்க வந்த போது அங்கு அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.

வழிகளை தேடாதே உருவாக்கு :
அவர் படங்களின் ஸ்டண்ட்மேன்கள் சண்டைக் காட்சிகளில் அநியாயத்துக்கு அடிபட்டு நடிக்கவே பலர் இவருடன் ஸ்டண்ட் காட்சிகள் செய்ய மறுத்தனர். அதனால் இவரே ஒரு சண்டைக் காட்சிக்கான குழுவை நிறுவினார். அவர்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு இவரே பொறுப்பேற்றுக் கொண்டார்.
  
வெல்லும் வரை விடாதே :
     டிராகன் லார்ட் படத்தில் ஒரு வித விளையாட்டைப் பற்றிய காட்சியில் அவர் எதிர்பார்ததது போல் அமையவில்லை. பிறகு எத்தனை முறை முயற்சிக்கு பின் காட்சியை பதிவு செய்தார் தெரியுமா? 2900 முறை.

உனது பாணியை மாற்று :
     பல வருட காலமாக சண்டைக்காட்சிகளில் கலக்கிக்கொண்டு இருந்த ஜாக்கி அப்படிப்பட்ட படங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நான் வெறும் ஆக்சன் ஸ்டார் மட்டுமல்ல ஒரு உண்மையான நடிகன் என்று நிரூபிக்க விருப்புகிறேன். அதையும் சீக்கிரமே காண்பீர்கள்! என்றிருக்கிறார் அவர்.

எதையும் சிறு வயதிலேயே செய்திடு :
     ஜாக்கி சானின் இந்த நிலைக்கு காரணம் அவர் சிறு வயதில் கற்றுக்கொண்ட தற்காப்பு கலைகள், வாழ்க்கை நெறிகள்.

உனக்கென வழிகாட்டியை வைத்துக்கொள் :
உண்மையாய் இரு ! உயர்ந்திரு
 

பிறப்பு :
ஜாக்கி சான் ஹாங்காங்-கில் ஏப்ரல் 7 1954 ல் சார்லஸ் சான் மற்றும் லீ-லீ சான் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் அவருக்கு சான் காங்-சாங் என்று பெயரிட்டனர் அதாவது ஹாங்காங்-கில் பிறந்தவர் என்று அர்த்தம்.
ஜாக்கிசான் பெற்றோர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவர் பிறக்கும் போது 5 கிலோ எடை உள்ளவராக இருந்தார். அவரது தந்தை கடன் வாங்கியே மருத்துவ செலவை செய்தார்.

சிறுவயது பயிற்சி :
ஜாக்கி சானின் தந்தை ஹாங்காங்-கில் பிரெஞ்சு தூதரகத்தில் சமையல்காரர், தாய் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண், இவர்கள் ஹாங்காங்-கில் உள்ள விக்டோரியா பீக்-ல் வாழ்ந்து வந்தார்கள். ஜாக்கி சானின் சிறு வயதில் அவரது தந்தை அவரை அதிகாலையில் எழுப்பி குங்-பூ பயிற்றுவிப்பார். இது தான் ஜாக்கி-க்கு பொறுமையையும், வலிமையையும், தைரியத்தையும் அளித்தது.

ஜாக்கி சானின் 7 வயதின் போது அவரது தந்தைக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தலைமை சமையல்காரராக வேலை கிடைத்தது. அதன் விளைவாக ஜாக்கி சானை ஹாங்காங்-கில் உள்ள சீன நாடக கலைக்கூடத்தில் சேர்த்து விட்டார். அடுத்த பத்து ஆண்டுகள் அவரது வாழ்க்கை நிகழ்வுகள் அங்கு தான்.

நாடக கலைக்கூடம் :
ஜாக்கி சான் கல்வி பயின்ற நேரம் போக அங்கு தற்காப்பு கலைகள், பாடுதல், நடித்தல் போன்றவற்றை கற்றுக் கொண்டார். அதே தருணத்தில் அந்த கூடம் கண்டிப்பு வாய்ந்தது, செய்யும் தவறுக்கு பிரம்படிகள் தவறாது. அவரின் பெற்றோரை அரிதாகவே காண முடிந்தது. அது ஜாக்கி சானிற்கு கடுமையான தருணம்தான்.

சீனா கலைக்கூடத்தில் இருந்தபோது, ஜாக்கி சானின் எட்டாவது வயதில் கான்டோனீஸ் திரைப்படமான “ செவென் லிட்டில் வேலியென்ட் பைட்டர்ஸ் : பிக் அண்ட் லிட்டில் வோங் டின் பார்” –இல் அறிமுகமானார். பின்னர் அவர் மற்ற மாணவர்களான சக நடிகர்கள் சம்மோ ஹங் மற்றும் யுவான் பியவோ-வுடன்  “தி செவென் லிட்டில் பார்ச்சூன்ஸ்” என்ற செயல்திறன் குழுவில் இணைந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு மூவரும் இணைந்து பணியாற்றினர் அப்போது அவர்கள் “தி த்ரீ பிரதர்ஸ்” என்றே அழைத்தனர். ஜாக்கி ஒரு சில ஆண்டுகளுக்கு பின் ஹாங்காங் திரைப்படத் துறையில் ஸ்டண்ட் மேன்-ஆக பணியாற்றினார்.

திரைப்பயணம் - ஸ்டண்ட் வேலை :
ஜாக்கி-க்கு 17 வயதாக இருந்த போது அவர் சீனா நாடக கலைக்கூடத்தில் பட்டம் பெற்றார். துரதிர்ஷ்டவசமாக சீன நாடக குழுக்கள் பிரபலமாக இல்லை. எனவே ஜாக்கி-யும் அவரது தோழர்களும் வேறு வேலைகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது, ஏனெனில் நாடகப் பள்ளியில் அதிகம் எழுதப் படிக்க கற்றுத் தரவில்லை. அவருக்கு கிடைக்க கூடிய ஒரே வேலை ஸ்டண்ட் வேலை.
ஜாக்கி சான் எதையும் முயற்சிப்பவர், அச்சமற்றவர் அதனால் அடுத்த சில ஆண்டுகள் அவர் ஸ்டண்ட்மேனாக பணியாற்றினார். ஆனால், ஹாங்காங் திரைப்படத்துறை தோல்வியடையத் தொடங்கியபோது, அவர் தனது பெற்றோருடன் வாழ ஆஸ்திரேலியா செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

அவர் ஒரு உணவகத்திலும், கட்டுமானத் தளத்திலும் வேலை பார்த்தார் அங்கு தான் அவருக்கு “ஜாக்கி” என்ற பெயர் வந்தது.
ஜாக் என்ற தொழிலாளி ”காங்-சாங்” என்று உச்சரிப்பதில் சிக்கல் ஏற்ப்பட்டது மேலும் ஜாக்கியை “லிட்டில் ஜாக்” என்று அழைக்கத் தொடங்கினார். அதுவே பிறகு ஜாக்கி என்றானது.

ஆஸ்திரேலியா-வில் ஜாக்கி மிகவும் மகிழ்ச்சியற்றவராக இருந்தார். கட்டுமானப் பணிகள்கடினமாகவும் சலிப்பாகவும் இருந்தன. அவரது அதிர்ஷ்டம் வில்லி சான் என்ற மனிதரிடமிருந்து தந்தி வடிவில் வந்தது. வில்லி சான் ஹாங்காங் திரைப்படத்துறையில் பணியாற்றுபவர். அவர் லோ வேய் என்ற ஹாங்காங் தயாரிப்பாளர்/டைரக்டரின் ஒரு புதிய திரைப்படத்திற்காக நடிக்க ஒரு நடிகரை தேடிக்கொண்டிருந்தார். வில்லி, ஜாக்கியின் ஸ்டண்ட்மேன் பணியால் ஈர்க்கப்பட்டார். அப்போது வில்லி ஜாக்கியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தெரியாது வில்லி சான், ஜாக்கியின் நண்பராகவும், மேலாளராகவும் ஆவார் என்று. பிறகு “நியூ பிஸ்ட் ஆஃப் ப்யூரி” படத்தில் நடிக்க ஹாங்காங்-கிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது 1976 ஜாக்கி சானிற்கு 21 வயது.

ஜாக்கி சானின் திரைப் பயணமானது தொடர்ந்தது. பல வித போராட்டங்கள், சர்ச்சைகள், எழும்பு முறிவுகள் அதனோடு தொடர் முயற்சிக்கான வெற்றிகளும் ஜாக்கி சானின் வசமானது. சீனா திரைத்துறை மட்டுமல்லாது ஜப்பானிய மற்றும் அமெரிக்கா திரைப்படங்களிலும் நடித்தார். பிறகு, ஆசிய கண்டத்திலேயே மிக முக்கிய நடிகர்களில் ஒருவரானார்.

குடும்பம் :
ஜாக்கி சானிற்கு 1982 ல் லின் பெங்-ஜயாவ் திருமணம் நடந்தது. அவருக்கு ஜெய்சே சான் என்று ஒரு மகன் உள்ளார். அவரும் தற்போதைய நடிகர்.

கொடைகள் / விருதுகள் :
ஜாக்கி சான் பன்முக கலைஞர் மட்டுமில்லாமல், அவர் தன் வாழ்நாளில் பல நிதிகளை கொடையாக உலக சிறுவர் நிதியங்களுக்கு அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர் சம்பாதித்த பணத்தை சிறிதளவு கூட தன் மகனிற்கு இல்லை என்று அறிவித்துவிட்டார். இவையனைத்தும் அவருக்கு பிறகு, அற காரியங்களுக்கும், கொடையாகவும் பயன்படுத்தப்படும்.
ஜாக்கி சானின் 56 வருடகாலத் திரைப்பயணத்தில் அவர் வாங்காத விருதுகள் கிடையாது. அதிலும் சிறப்பாக 2௦16 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதானையாளருக்கான  ஆஸ்கார் விருதினைப் பெற்றார் அப்போது அவருக்கு 62 வயது.

செயல் மொழிகள் :

பெரிய வெற்றி பெரிய இலட்சியங்களுடன் மட்டுமே வருகிறது.

நாம் தவிர்க்கும் சண்டைகளே சிறந்த சண்டைகள்.

சூழ்நிலைகள் உங்களை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். உங்களுக்கு ஏற்றார்போல் சூழ்நிலைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.


-    ஜாக்கி சான்


No comments