மெய்ப்பாட்டியல் என்றால் என்ன...
மெய்ப்பாட்டியல் என்ற
சொல்லின் விளக்கமானது :
மெய்யில்(உடலில்) தென்படுவது
மெய்ப்பாடு. அதாவது மனித உள்ளத்தின் உணர்ச்சிகள் உடலில் தென்படுவது
மெய்ப்பாடு என்று பொருள்.
தொல்காப்பிய
பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் ஒன்று மெய்ப்பாட்டியல் (தொல்காப்பிய நெறி).
தொல்காப்பியம் உரைக்கும்
மெய்ப்பாடுகள் எட்டு. அவை தோன்றும் இடங்கள் என்று ஒவ்வொன்றும் நான்கு வகைகளாக
பகுக்கப்பட்டுள்ளது. அதாவது 32 மெய்ப்பாடுகள் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன.
உடலில் தோன்றும் மெய்யுணர்வுகள் அனைத்தும் புறப்பொருளில் தோன்றுவன.
மெய்ப்பாடு
|
தோன்றும் சுவைகள்/உணர்வுகள்
|
நகை
|
எள்ளல், இளமை, பேதமை, மடன்
|
அழுகை
|
இளிவு, இழவு, வறுமை,அசைவு
|
இளிவரல்
|
மூப்பு, பிணி, வருத்தம்,மென்மை
|
மருட்கை
|
புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்
|
அச்சம்
|
அணங்கு, விலங்கு, கள்வர், தம்-இறை
|
பெருமிதம்
|
கல்வி, புகழ்மை, கொடை, தறுகண்
|
வெகுளி
|
உறுப்பறை, குடிகோள், அலை, கொலை
|
உவகை
|
செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு
|
அட்டவணையில் உள்ள எட்டு
வகை மெய்பாட்டியலின் கூறுகள் இந்த 32 மெய்ப்பாடுகள்:
உடைமை,இன்புறல்,நடுவுநிலை,அருளல்,தன்மை,அடக்கம்,வரைதல்,அன்பு,
கைம்மிகல்,நலிதல்,சூழ்ச்சி,வாழ்த்தல்,நாணுதல்,துஞ்சல்,அரற்று,கனவு,
முனிதல்,நினைதல்,வெரூஉதல்,மடிமை,கருதல்,ஆராய்ச்சி,விரைவு,உயிர்ப்பு,
கையாறு,இடுக்கண்,பொச்சாப்பு,பொறாமை,வியர்த்தல்,ஐயம்,மிகை,நடுக்கு
(உள் உணர்ச்சிகளின்
வெளிப்பாடு உடலில் தெரிவது மெய்ப்பாடு. எ-கா சிரிப்பு....)
[தொல்காப்பியர் மெய்ப்பாடு என்பதனை வினைய
நிமித்தம் என்ற சொல்லால் குறிப்பிடுவார்.
உரையாசிரியர்கள்
மெய்ப்பாட்டியலை அவத்தை என்ற சொல்லைக் கொண்டு குறிப்பிடுவார்.]
[திருக்குறள் கூறும் மெய்யுணர்தல் என்பது மெய்யை
உணர்தல் அதாவது உண்மையை உணர்தல்/ பொய்மையை அறிந்து விலக்குதல் அதாவது திருக்குறளானது மெய்யறிவைப் பற்றி
விளக்குகிறது.]
(உணர்ச்சிக் கோட்பாட்டு உருளை- எண்கோண பார்வை)
தகவல் - மூலம்: விக்கிபீடியா
No comments