வெய்யோன் சில்லி-யின் பொருள்?
கம்பராமாயனத்தில் வெய்யோ_னொளி
என்ற சொல் சூரியனின் ஒளியை குறிக்கும் அதாவது வெய்யோன் என்றால் சூரியன்
என்று பொருள்.
சீவக சிந்தாமணி நூலில் புகழ்வெய்யோன் என்ற சொல் விருப்பமுள்ளவன்
, இச்சையுள்ளவன் என்றும் பொருள்படும்.
கந்தபுராணத்தில் ஆர்த்தனர் வெய்யோர் என்ற சொல்லில்
வரும் வெய்யோர் கொடியவன், தீயவன் என்ற
பொருளைக் கொடுக்கிறது.
காசிகண்டம் என்ற நூலில் இலகுவெய்யோனிற் பதினாறளவை விடல் என்ற சொல் வலதுநாசித்துவாரத்தை குறிக்கிறது.
சில்லு (அ) சில்லி என்ற சொல்லானது வட்டம் என்ற பொருளையும், மிகச்சிறு
துண்டு என்றும் பொருள் கொடுக்கிறது.
(சூரரைப் போற்று வெய்யோன் சில்லி பாடலில்
வரும் பொருள் சேர்ந்து சூரியனின் சிறு துண்டு என்ற பொருளை கொடுக்கிறது)
No comments