CT

அண்மை பதிவுகள்

எண்ணத் துணுக்குகள் 1 || Lines of vignesh



மனதின் உள்ளார்ந்த சிந்தனை முதல் வடிவம் பெற்று வெற்றி பெற்று நிற்கும் அவரவர் கனவில்...

அமைதியாகவே தொலைந்து போகிறது

அடைக்கலம் தந்த மனமும்...
அடங்க மறுத்த இனமும்...

சாதனை...
உன்னைக் காண பல ஆண்டு முயற்சித்து பயிற்சி மேற்கொண்டேன் நான்.

கடந்து போன கால்களின் பின்னே...
பின்தொடர்ந்தனர் மெய்க்காப்பாளர்கள்

நிழல் தரும் பார்வையில்
நிதானமாக நிந்தித்தாய்...

உலகை ஒளிரச்செய்யும் சூரியன் போல
நீ உன் உள்ளத்தை ஒளிரச்செய்...

உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்
வாழ்வு வண்ணமயமாகும்...

வெறுமை என்பது
அன்பு உள்ளங்கள் விலகிய இடம்.

யாரோ என்று கடந்து செல்கிறது நினனவுகள்
நினைவுகளின் சேமிப்பு நிலை நிரம்பி வழ்வதாலோ?

"மதி உள்ள ஆகாசத்தில் மதியில்லா மேகம்"

மழைப்பொழியும் மேகம் மதி இழந்து போனது !

விலைமதிப்பில்லா மழைத்துளி மதிப்பில்லா நிலத்தில் பொழியும் போது!

(எப்போது மழைத்துளியின் அருமை தெரிந்த விவசாய நிலத்தில் பெய்யத் தவறியதோ..!)

மௌனம் பேசியது
விழிகள் வாயிலாக...

எதனையும் செயல்படுத்தாமல் நினைத்து மட்டும்...
கொள்வதுதானோ இயல்பு வாழ்க்கை...

கற்று மறக்க முடியாதது...
தோல்வியில் கற்ற பாடம்...

ஒற்றைப் பறவையாய்
தனிமையில் தனித்துப் பறக்குது மனது.

வார்த்தைகள் தோற்றுவிட்டது...
என்னவளின் விழி மொழியால்...

தேடல்கள் வாழ்க்கையை சுவாரசியமாக மாற்றும் மந்திரங்கள்...

இரவெல்லாம் கண்விழித்து
தூக்கத்தைத் தேடும் சமூகத்தில் ஒருவனாக நான்.

கனவுகள் காத்திருக்கிறது
உன் கலை தாகத்தை அரங்கேற்றுவதற்கு...

மூடர்கள் அல்ல
நாடோடிகள்
தற்காலிக வாழ்வில் நிரந்திரத்தை தேடுவதற்கு...

நீதி நிதானமானால்
நிகழ்வது அநீதி...

நிலவில்லாத இரவு போல்
நீ இல்லாமல் நான்...
ஒளி இழந்து கிடக்கிறது என்  விழியும் வாழ்வும்...

கூடடைந்த பறவை உதிர்க்கும் சிறகில்
ஒருவகை நிம்மதி...

இமைகள் மூடித்திறக்கும் முன் 
என் வாழ்வு எனும் வானில் - நீ
மேகமாய் கடந்து சென்றாய்...



- விக்னேஷ்

No comments