CT

அண்மை பதிவுகள்

எண்ணத் துணுக்குகள் 2 || lines of vignesh




நள்ளிரவைக் கடந்தும் என் விழிகள் துயில் கொள்ள மறுக்கிறது அத்தேவதையின் கரு_விழிகளைக் கண்டதால்...

hikoo in tamil about life and love


எதிர்பாராத சந்திப்பில் ஏக்கம் படைத்துப் போனாள்....
(மீண்டும் சந்திப்பது எப்போது என்று..?)


நீ மறைக்கும் புன்னகையில்
பூவுலகின் புரியாத புதிர்கள் புதைந்து கிடக்குமோ...

ஒரே ஒரு முத்தம் நேசத்தின் வெளிப்பாடாய் நெற்றியில்...

நான்
நீ
நாம் ஆக
காதல் இடைபுக வேண்டும். – ஆனால்
அதற்கு தடையாய் சாதி இடை புகுந்தது...

எழிலுக்கு எழில் சேர்க்க வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்களை அள்ளிப்பூசிக்கொண்டாயோ பெண்ணே..!

ஒரு கோப்பை தேநீருடன்
ரொட்டித் துண்டும் சேர்ந்தது காதலில் மூழ்க...

மலர்கள் மண்ணில் விழும் முன்
மங்கையரைச் சென்றடைந்ததால் மோட்சம் பெற்றன...

இமைகளே விழிகளுக்கு பாரமாக இருக்கிறது.
உன்னைக் காணும் நொடிப்பொழுதில் ஏற்படும் இமைச் சிமிட்டலினால்...

பேனா முனையில் பிறவி எடுத்துக் கொண்டிருக்கிறது
மனதின் எண்ணங்கள்...

-விக்னேஷ்

No comments