CT

அண்மை பதிவுகள்

தமிழ்த்தாத்தா...

உ.வே.சாமிநாதன்



உ.வே.சா
இயற்பெயர்
வேங்கடரத்தினம்
ஆசிரியர்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.
இவர் தான் வேங்கடரத்தினத்திற்கு  சாமிநாதன் என்று பெயர் வைத்தார்.
பெற்றோர்
வேங்கடசுப்பையர், சரசுவதி 
பிறப்பிடம்
திருவாரூர் மாவட்டம், உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் பிறந்தார்.
உ.வே.சா
த்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன்
காலம்
19.02.1855 – 28.04.1942 (அகவை 87)
சிறப்பு பெயர்
தமிழ்த்தாத்தா
நினைவு இல்லம்
உத்தமதானபுரம்


உ.வே.சா சிறப்புகள்
உ.வே.சா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காக உழைத்தார்.
உ.வே.சா அவர்களின் தமிழ் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியன் வின்சோன் ஆகியோரால் பெரிதும் பாராட்டப்பட்டது.
உ.வே.சா உழைத்திராவிட்டால் தமிழுலகிற்கு சங்க இலக்கியங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை
உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 –க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும்(ஓலைச்சுவடிகள்), கைஎழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.     
தன் வாழ்க்கை வரலாற்றை ஆனந்த விகடனில் 1940-1942 தொடராக எழுதினார். அஃது  1950 ல் என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளி வந்தது.
தமிழக அரசு 1942 ல் உ.வே.சா நூல் நிலையம் துவங்கப்பட்டது.  
இந்திய அரசானது 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.  

உ.வே.சா பதிப்பித்த நூல்கள்
எட்டுத்தொகை
8
பத்துப்பாட்டு
10
சிலப்பதிகாரம்
1
சீவக சிந்தாமணி
1
மணிமேகலை
1
புராணங்கள்
12
உலா
9
தூது
6
வெண்பா நூல்கள்
13
அந்தாதி
3
பரணி
2
மும்மணிக்கோவை
2
இரட்டைமணிமாலை
2
பிற பிரபந்தங்கள்
4
கோவை
6

குறிப்பு:
ஓலைச்சுவடி என்பது பனை ஓலையைப் பக்குவப்படுத்தி அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவர்.
ஓலைச்சுவடியில் உள்ள எழுத்துகளில் புள்ளி இருக்காது, ஒற்றைக் கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது.
ஓலைச்சுவடி தேடி வந்த பெரியவர் – உ.வே.சா
உ.வே.சா ஓலைச்சுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் : ஈரோடு மாவட்டம் கொடுமுடி.

தமிழகத்தில் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்:
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – சென்னை 
அரசு ஆவணக்காப்பகம் – சென்னை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – சென்னை
சரசுவதி நூலகம் – தஞ்சாவூர்


No comments