CT

அண்மை பதிவுகள்

வள்ளலார்...

வள்ளலார் குறிப்பு
பதிவிறக்கம் செய்ய : வள்ளலார்


இராமலிங்க அடிகளார்
பிறப்பிடம் 
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மருதூரில் பிறந்தார்.
பெற்றோர்
இராமையா பிள்ளை, சின்னமையார்
சிறப்பு பெயர்
வள்ளலார், வடலூர் வள்ளலார், திருவருட்பிரகாச வள்ளலார்,  
காலம்
05.10.1823 – 30.01.1874
நூல்கள்
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.



வள்ளலாரின் சிறப்புகள்
மத நல்லிணகத்திற்காக சமரச சன்மார்க்க நெறிகளை தோற்றுவித்தார்
அறிவுநெறி விளங்க சத்திய ஞான சபையை நிறுவினார். (வடலூர்)
பசியால் வாடிய மக்களுக்கு உணவளிக்க (சத்திய தர்மச்சாலை) அறச்சாலையை அமைத்தவர். (அணையா அடுப்பு உள்ள இடம் - வடலூர்)
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - வள்ளலார்
இராமலிங்க அடிகளார் பாடிய பாடல்களின் (திரட்டிற்கு) தொகுப்பிற்கு பெயர் – திருவருட்பா
வள்ளலார் பாடல்களை மருட்பா என்று கூறியவர் – ஆறுமுக நாவலர்
கடவுளை “ கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்றும் உயிரில் கலந்தான் கருணை கலந்து “ என்று பாடியவர் -  இராமலிங்க அடிகளார்
அரசு இவரது சேவையை கருத்தில் கொண்டு 2007 ஆகஸ்ட்  17  ல் இவர் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

\

வள்ளலாரின் கொள்கைகள்
எதிலும் பொது நோக்கம் வேண்டும்
இறந்தவர்களை சமாதி வைத்தல் வேண்டும். எரிக்கக் கூடாது.
எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
பசித்தவர்களுக்கு சாதி, மத, இன, மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
புலால் உணவு உண்ணுதல் கூடாது.
கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கூடாது.

No comments