அலாரம் மூலம் தூக்கத்தில் இருந்து எழுவது தவறு. ஒருவர் எழுப்புவதற்கும் அலாரம் வைத்து எழுவதற்கு வித்யாசம் உண்டு. அலாரத்தினால் தூக்கத்தில் இருந்து எழுவது உடலில் பாதிப்புகளை உருவாக்கும்.
சிறந்த ஆலோசனை கூறுபவர்கள் அதிக பிரச்சனையில் இருப்பவர். அல்லது சந்தித்தவர்.
ஒருவர் பேசும் போது அவர்களின் கைகளை பிறர் பார்க்கும் படி வைத்திருந்தால் அவரின் பேச்சு நம்பகத்தன்மை கொண்டது.
உலகில் பெண்களே ஆண்களை விட அதிகமாக பொய் பேசுபவர்கள். பொய் என்று அறிந்து கொள்பவர்களும் அவர்களே.
தூங்கும் பொழுது தான் மூளை அதிக வேலை செய்யும்.
அதிகமாக இணையத்தில் நேரம் செலவழித்தால் மனரீதியான பாதிப்புகள் வரும்.
சிறிய கையெழுத்து உடையவர் அதிகமாக பேச மாட்டார்.
அதிகமாக குற்றவுணர்வு கொள்பவர் மற்றவரின் உணர்ச்சிகளை புரிந்து கொள்வார்.
சுயமதிப்பீடு குறைவாக உள்ளவர் எளிதில் அடுத்தவரை அவமான படுத்திவிடுவார்.
வலதுபுறம் படுத்தால் சீக்கிரமாக உறக்கம் வரும்.
ஒருவர் உங்களிடம் பேசும் பொழுது அவருடைய பாதங்கள் உங்களை நோக்கி இருந்தால் அவருக்கு உங்கள் பேச்சில் ஆர்வம் உள்ளது. இல்லையெனில் ஆர்வம் இல்லை.
கோபமாவோ அல்லது அமைதி இல்லாத நிலையில் இருக்கும் பொழுது நீல நிறத்தை பார்த்தால் மனம் அமைதியடையும்.
நேர்மறையாக சிந்தித்திதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நவம்பர் மாதம் பிறந்தவர்களில் சிலர் கொலை செய்யும் அளவிற்கு கோபம் கொண்டவர்கள். உலகின் அதிக சீரியல் கொலையாளிகள் நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள்.
அடர்த்தியான நிறங்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடையலாம்.
சாக்லேட், ஆரஞ்சு போன்றவை மன அழுத்ததை குறைக்கும்.
நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை அடிக்கடி வெளிப்படுத்தினால் அதன் மீது உங்களுக்கு ஆர்வம் குறைந்து விடும்.
மனித உளவியல் உண்மைகள்...
Reviewed by தமிழ்கரு
on
May 25, 2019
Rating: 5
No comments