நமக்கு நாமே விதித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிகள்...
- நமக்கு நாமே தான் எல்லாம் இறுதியில், என்ற தெளிவு.
- சண்டைகளில் செலவழிக்க அவ்வளவு நேரம் நம் கையில் இல்லே என்ற புரிதல்
- சேமித்தல் செலவழிப்பது விட முக்கியம். அனுபவித்தல் சேமித்தல் விட முக்கியம்.
- மகிழ்ச்சியினை அளவிட பணம் மட்டுமே காரணி அல்ல.
- கவலைகள் தொடர் வண்டிகள் போல் தொடர்ந்தால், கவலையே படாமல் சட்டென தொடர் வண்டியை மாற்றிடுங்கள்
- தனந்தனியாக ஊர் சுற்றலும் சில நேரம் பெரிய கவலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.
- காரணம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருங்கள், பின் மகிழ்ச்சி நம்மிடம் வரக் காரணம் கண்டுபிடிக்கும்.
- வாழ்க்கை நீண்ட நெடிய பயணம் இல்லை தான், அதனால் அனுபவித்து வாழ, மகிழ, பிறரை மகிழ்விக்க ஆரம்பியுங்கள். வாழ்க்கை என்றுமே வசந்தகாலமாக மாறும்.
- சுமதி
No comments