CT

அண்மை பதிவுகள்

சொல் அறிவோம்...




நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொல்லானது எவ்வாறு பயன்படுத்துவது...

(வாழ்த்துதல்) 

ஒருவரை அகத்தில் இருந்து வாழ்த்துவது என்பது உள்ளார்ந்த சொல் ஆகவே முதலில் அதுபோன்ற சொற்களுக்கு பன்மைக்கான “கள்” விகுதியை பயன்படுத்துதல் கூடாது.

ஆதலால் வாழ்த்து என்பது மிகச் சரியான சொல் பயன்பாடு ஆகும்.

எனினும் இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் பன்மையில் வாழ்த்தி பழகியதால் அதை தவிர்ப்பது சுலபமானது அல்ல. எனவே, பன்மையில் கூறும் போது வாழ்த்துகள் என்று கூறுவதா இல்லை வாழ்த்துக்கள் எனக் கூறுவதா என ஐயப்பாடு எழும்.
இலக்கணப்படி
1)      பன்மையை குறிக்கும்  “கள்”  சொல்லானது விகுதி அது ஒரு போதும் முன்னால் உள்ள சொல்லுடன் சேர்ந்து புணராது.

2)      க்,ச்,ட்,த்,ப்,ற்  எழுத்துகள் வந்து அதைத் தொடர்ந்து ‘உ’கர எழுத்துகள்  வந்தால் அதன் பிறகு மெய் எழுத்து வரக்கூடாது.
(எ-கா)
தோப்பு
பு = (ப் + உ) +  கள்(பன்மை விகுதி) = தோப்புகள்

வாழ்த்து
து = த் + உ + கள்  = வாழ்த்துகள்



ஆகவே,பன்மையில் வாழ்த்துகள் என்று கூறலாம். ஆனால் முறையான சொல் பயன்பாடு வாழ்த்து தான்.

(கள் ஆனது முன் வரும் வாழ்த்து என்ற சொல்லுடன் சேர்ந்து புணர்ந்தால் அதன் பொருளானது குடிக்கின்ற  ‘கள்’ளுக்கு வாழ்த்து சொல்வதாய் பொருள்படும். எனவே, வாழ்த்துக்கள் என்ற பயன்பாட்டை தவிர்ப்போம்.
அவ்வாறு தெரிந்தே அதைப் பயன்படுத்தினால் அந்தச்சொல் இலக்கணப்போலியாக கருதப்படும்.)


 

No comments