மன்னன்
அந்தக் காலத்துல ஒருத்தன் கடல் வாணிபம்
செய்யறதுக்காகப் போறான்.
கப்பல் உடைஞ்சு கடல்லே மூழ்கிப் போயிடுது.
அவனும் போயிடுறான்.
அவனுக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு. வாரிசு
இல்லே. முறைப்படி வாரிசு இல்லாத சொத்து அரசங்கத்துக்கு சேர வேண்டியதுதானே!
அப்படி-ன்னு அரசாங்க நிதி அமைச்சர் மன்னரிடம் கூறுகிறார்.
மன்னர் ஒரு முறை யோசித்துப் பார்த்தார், பிறகு
அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது அமைச்சரே, அந்த நபர் ஒரு பெரிய வியாபாரி-ன்னா அவன் இன்னொரு கல்யாணம் கூட பண்ணிருக்கலாம், அவன்
மனைவி கர்ப்பமா இருக்க கூட வாய்ப்பு
இருக்கு, அப்படி இருக்கிறார்களா என விசாரிக்க உத்தரவிட்டார்.
அரசாங்க அதிகாரிங்க விசாரிச்சாங்க. மன்னன்
எதிர்பார்த்த மாதிரியே செத்துப்போன வியாபாரியின் ஒரு சம்சாரம் கர்ப்பமா இருக்கிறது
தெரியவந்தது.
உடனே மன்னன் சொன்னார்;
“அந்த வியாபாரியின் சொத்து அரசாங்க கஜானா-விற்கு
வரவேண்டியதில்லை, அவை அனைத்தும் கருவில் வளரும் வியாபாரியின் குழந்தையைத் தான்
போய்ச்சேரும்!”
இப்படி தீர்ப்பு கொடுத்த அந்த மன்னன் வேறு
யாருமில்லை “துஷ்யந்தன்” தான்.
ஆமாம்! காளிதாசனுடைய சாகுந்தலத்துல வர்ற ஒரு காட்சிதான் இது!
அந்தக் காலத்துலேயெல்லாம் ஒருத்தர் ராஜா
ஆகணும்னா அதுக்கு முன்னாடி அதுக்கான யோக்யதைகளை சம்பாதிச்சிருக்க வேண்டியது ஒரு
அவசியமாயிருந்தது.
குருகுலம் பயின்று, சாஸ்திரங்கள் எல்லாம்
அறிந்தவனாக இருக்க வேண்டும்.
(சாஸ்திரம் என்பது வேதங்கள்(ரிக், யசூர், சாமம், அதர்வனம்),பற்றிக்
குறிப்பிடுவது)
தர்மத்துலேயும் பண்புலேயும் அவங்க உயர்ந்தவங்களா
இருக்கணும்.
மன்னனாகி வெளி எதிர்களை ஜெயிக்கிறதுக்கு
முன்னாடி – காமம் குரோதம் இது மாதிரியான
ஆறு உள் விரோதிகளை ஜெயிச்சிருக்கணும்.
ஓர் மன்னன் மக்கள்கிட்ட எப்படி வரி வசூலிப்பது
பற்றி கூட கூறியிருக்காங்க.
ஒரு வண்டானது எப்படி மலருக்குத் தெரியாமல் தேனை
எடுத்துக் கொள்கிறதோ அது மாதிரிதான், மன்னன், குடிமக்களுக்கு கொஞ்சம் கூட சிரமம்
தெரியாமல் அவர்களின் மலர்ச்சி குன்றாமல் வரி வசூலிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
அதனால ஒரு நாட்டிற்கு
மன்னனா இருக்கிறது சாதாரணமல்ல... அதற்கெல்லாம் மேற்கூறிய தகுதிகள் வேண்டும்.
நம்ம நாட்டு குடிமகன்ல ஒருத்தர் பல தொழில்கள்
செய்ய பல முறை கடன் வாங்கி மீண்டும் விமானம் வாங்க கடன் வாங்கினார்.
“என்னங்க ஆச்சரியமா இருக்கு... ஏற்கனவே நீங்க
வரியும், வட்டியும் கட்ட முடியாம இருக்கீங்க... இந்த நிலைமைல இதுவேற தேவையா?”-ன்னு
இன்னொரு குடிமகன் கேட்டார்.
இதுக்கு அவரு சொன்னார் :
“அப்படி இல்லைங்க... என்கிட்டே வரியும்,
வட்டியும் வசூல் பண்ணவர்றப்போ இப்போ என்கிட்டே இருக்குற வாகனங்களே எளிதா தப்பிப் போக
முடியல அதானால தான் விமானத்தையே வாங்கறேன்!”- அப்படின்னார்👴.
No comments