புவிசார் குறியீடு-னா என்ன?
புவியில் ஒரு குறிப்பிட்ட இடத்தையோ அல்லது
தோற்றத்ததையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தும் சின்னம் அல்லது பெயர்
தான் புவிசார் குறியீடு எனப்படும்.
இந்த புவிசார் குறியீடு தான், அந்த பொருளின்
புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ ஒரு சான்றாக விளக்கும்.
இதன்
முக்கிய அம்சம் என்னவென்றால் இதுபோன்ற புவிசார் குறியீடு பெற்ற பொருளை சம்பந்தப்பட்ட
பகுதியை (அ) ஊரைத்தவிர மற்ற இடங்களில் தயாரிக்கவும் அதை சந்தைப்படுத்தவும் அனுமதி
கிடையாது. அதை முயற்சிபோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.
தமிழ்நாட்டில் இது வரை இருபத்துஒன்பது பொருள்களுக்கு
புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
அவற்றில் சில
காஞ்சிபுரம் – பட்டு புடவை
ஆரணி – பட்டு
தஞ்சாவூர் – தலையாட்டி பொம்மை, ஓவியங்கள், வீணை,
கலைத்தட்டு
பத்தமடை – பாய்
பவானி – ஜமக்காளம்
மதுரை – சுங்குடி சேலை, மல்லிகைப்பூ
நாச்சியார்கோவில் – குத்துவிளக்கு...
அதுமட்டுமில்லாமல் இன்னும் முப்பது பொருள்களுக்கு புதிதாக புவிசார் குறியீடு கோரி
விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் பால்கோவா –விற்கும்,
கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கும் விரைவில் புவிசார்
குறியீடு கிடைக்கவிருக்கிறது.
இதனால் உள்ளூர் பொருள்களின் பொருளாதாரம் உயரும்.
No comments