சாப்பிடுவது எப்படி?
ஒருத்தர் வந்தார்.
“உங்ககிட்ட ஒரு விவரம் கேட்டுத்
தெரிஞ்சிக்கணும் -ன்னு வந்திருக்கேன்.
அது உங்களுக்குத்தான் நல்லா
தெரிஞ்சிருக்கும்ங்கறது என்னோட நம்பிக்கை”. அப்படின்னார்.
எனக்கு ரொம்பப் பெருமையா இருந்தது.
“சரி... கேளுங்க!“ –ன்னேன்.
“சாப்பிடுவது எப்படி?”- ன்னார்.
நான் ஒரு மாதிரியே ஆயிட்டேன்.
“ஏன் சார்... இதைக் கேட்கறதுக்கா இவ்வளவு தூரம்
மெனக்கெட்டு வந்தீங்க?” ன்னேன்.
“ஆமாங்க நீங்க அதை பத்தி எங்கயாவது
படிச்சிருப்பீங்க... அதனாலே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்-ன்னு
நினைச்சேன்.”-னார்.
சரி... இப்படி வந்து உட்காருங்க... நம்ம
முன்னோர்கள் சில முறைகளைச் சொல்லி வச்சிருக்காங்க...அதைச் சொல்றேன்னு
ஆரம்பிச்சேன்.
விஞ்ஞானிகள் சொல்ற செய்தின்னா அது காரண
காரியத்தோட இருக்கும். ஏன் எதுக்குன்னு கேட்டா அதுக்குப் பதில் இருக்கும்.
இது முன்னோர்கள் சொன்னதுங்கறதுன்னால... இதிலே ஏன்
அப்படி, எதுக்காக இப்படின்னுலாம் கேக்கக்கூடாது... அதெல்லாம் அனுபவத்துல
சொல்றது... அதனாலே பேசாம கேட்டுக்கணும் அதான் நல்லது.
சரி அவங்க என்ன சொல்றாங்க?
o
சாப்பிடுவதற்கு முன்னாடி கை-கால்-முகமெல்லாம்
கழுவணும்.
o
நின்று கொண்டு சாப்பிடக்கூடாது.
o
கட்டில உட்காந்து சாப்பிடக்கூடாது,
படுத்துகிட்டு சாப்பிடக்கூடாது
o
சாப்பிடும்போது பேசாமல் சாப்பிடனும்.
.
ü சாப்பிடும்போது முதல்லே இனிப்ப சாப்பிடுங்க... கடைசில கசப்ப
சாப்பிடுங்க... மற்ற சுவைகளெல்லாம் நடுவிலே சாப்பிடுங்க.
ü சாப்பிடும்போது தண்ணீர் குடிக்க வேண்டாம். விக்கல் எடுத்தா
மட்டும் குடிக்கலாம்.
ü சாப்பிடும்போது அனுபவித்து, சுவைத்துச்சாப்பிடணும்.
ü சாப்பிடும்போது சாப்பாட்ட குறை சொல்லாம சாப்பிடுவது ஒரு
நல்ல பண்பு.
Ø ரொம்ப கோபத்திலோ அல்லது வருத்ததிலோ இருக்கீங்களா? அது
மாதிரி சமயத்துல சாப்பிடக்கூடாது.
Ø எப்ப சாப்பிட்டாலும் பாதி வயிறு சாப்பாடு... கால் பாகம்
தண்ணீர்... மீதி கால் பாகம் காலியாகவே இருக்கணும். வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.
Ø இரவில் சாப்பிட்டதுக்கு அப்புறம் கொஞ்ச தூரம் நடக்கலாம்...
இல்லேனா உட்கார்ந்திருக்கலாம்... அப்பதான் உணவு செரிக்கும்.
“பசி எடுத்த பிறகு கையை வாய்க்குக் கொண்டு போறவனும், பசி அடங்குவதற்குள் கையை
வாயிலிருந்து விலக்கி கொள்கிறவனும் நோய்வாய்ப்படமாட்டான்” அப்படிங்கறது பெரியோர்
வாக்கு.
“சாப்பிட்டது செரிச்சுட்டதா? அதுக்கப்புறம்
சாப்பிடு!– உனக்கு நோயே வராது!” –ங்கறார் வள்ளுவர்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
இவ்வளவும் கவனத்தில
வச்சிட்டு சாப்பிட்டா எப்பவும் நோயும், கவலையும் இல்லாம வாழலாம்.
அம்மா ஒருத்தவங்க சொன்னாங்க...
“என் பையன் சாப்பிடுவதற்கு
முன்னாடி கை கழுவமாட்டேங்கறான்!” –னாங்க.
அதுக்கு இன்னொரு அம்மா,
“அது பரவாயில்லைங்க...
என் பையன் சாப்பிட்டதுக்கு அப்புறமும் கையைக் கழுவ மாட்டேங்கறான்!” அப்படின்னாங்க!😐
No comments