புதையலைப் புரிந்து கொள்
ஓர் இளைஞன்.
ஒரு சாலை ஓரமா அழுதுக்கிட்டு உட்கார்ந்து
இருந்தான்.
அந்தப் பக்கமா பிச்சை எடுத்து சாப்பிடுற
ஒருத்தன் வந்தான்.
“ஏன் அழுதுக்கிட்டு உட்கார்ந்து இருக்கே?”-ன்னு
கேட்டான்.
“என்கிட்டே ஒண்ணுமே இல்லை இந்த உலகத்துல நான்
இருந்து என்ன பிரயோஜனம்..? அதான் அழறேன் !”-ன்னான் அவன்.
உன்கிட்டே மறைந்திருக்கும் புதையல் என்
கண்ணுக்கு தெரியுது அதை விற்க தயாரா?-ன்னு கேட்டான் இவன்.
இளைஞனுக்கு ஆச்சர்யம்.
“என்கிட்டே ஒரு காசு கூட இல்லையே.. அப்படி
இருக்கறப்பே புதையல் எங்கிருந்து வந்தது?-ன்னான்.
பிச்சைக்காரன் சிரிச்சான்... :-D
“இப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க நீ என்கூட வா
இந்த ஊர் அரசன்கிட்டே போவோம் உன் புதையல நல்ல விலைக்கு எடுத்துக்குவாங்க!” –ன்னா.
“அது எப்படி உனக்குத் தெரியும்?”
இதுக்கு முன்னாடி பலபேர அழைச்சிட்டு
போயிருக்கேன் அதான் உன்னையும் கூப்பிடறேன்.
இவனுக்கு ஒண்ணுமே புரியல... யோசிச்சான்.
என்ன யோசிக்கிற உனக்கு பணம் வேண்டும்னா என் கூட
வா.-ன்னு சொல்லிகூப்பிட்டான்.
சரி இங்க உட்கார்ந்து கிடக்கறதுக்கு போய்தான்
பார்க்கலாம்-ன்னு இவனும் பிச்சைக்காரன் கூட போனான்.
வழியிலே அந்த பிச்சைக்காரன் சொன்னான்:
இங்கே பாரு இப்பவே..சரியா முடிவு எடுத்துக்கோ
அப்புறம் ராஜாவா பார்க்கலாம்.
அப்புறம் அரசன்கிட்ட போனதும் இல்லை என்னால என்
கிட்டே இருக்க புதையல விற்க முடியாதுன்-ன்னு மாத்தி பேசக்கூடாது..
இவனுக்கு ஒண்ணுமே புரியல.. என்கிட்டே
ஒண்ணுமேயில்லை.. புதையலா-ன்னு குழம்பினான்.
இப்போ அந்த பிச்சைக்காரன் விளக்கினான்:
“உதாரணத்துக்கு உன் கண்களை எடுத்துக்கோ அதுக்கு
நீ என்ன விலை கேட்டுடப் போறே..
நான் அதுக்கு அரசன்கிட்டேயிருந்து 50000
ரூ வாங்கித் தர்றேன்.
இதயத்தைக் கொடுக்கிறீயா 20 இலட்சம் ரூ வாங்கித் தர்றேன்.
மூளையைக் கொடுக்கிறீயா 30 இலட்சம் ரூ வாங்கித்
தர்றேன்.
“என்ன உளர்றே? உனக்குப் பைத்தியமா என்ன விலை
கொடுத்தாலும் அதையெல்லாம் நான் விற்க மாட்டேன். நான் மட்டுமில்லை யாருமே விற்க
மாட்டங்க.!”-ன்னான்.
இப்ப அந்த பிச்சைக்காரன் வாய் விட்டு
சிரிச்சான்.
“இப்ப பைத்தியமானது நானா?நீயா?.. இலட்சக்கணக்கான...
கோடிக்கணக்கான ரூ பெறுமானமுள்ள பொருள்களை நீயே வைச்சிகிட்டு என் கிட்டே ஒண்ணுமே
இல்லையே-ன்னு மரத்தடியில உட்கார்ந்து அழுதுட்டு இருந்துருக்கியே!”-ன்னான்.
நம்ம ஆளுங்க எல்லாம் புதையலை உள்ளே தேடறது
இல்லை..வெளியே எங்கயாவது கிடைக்கும்-ன்னு தேடுறதுதான் வழக்கம்.
ஆனா புதையல் நமக்குள்ளேயே தான் இருக்கு. இதை
புரிய வைக்க ஒரு பெரியவர்(ஓசோ) சொன்ன கதைதான் இது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரயில்வே ஸ்டேஷன் பக்கம் வெளியிலே ஒரு டாக்ஸி
நின்னுக்கிட்டிருந்தது.
அந்த பக்கமா வந்த ஒருத்தர் டாக்ஸி டிரைவர பார்த்து “ஐயா
உங்க வண்டி பின் சீட்ல ஒரு மணி பர்ஸ் கிடக்குது மறந்து விட்டுட்டு போயிட்டாங்க
போல-ன்னு சொன்னான்.
இல்லை இல்லை அது காலி பர்ஸ் தான் நான் தான் அதை அங்க போட்டு
வச்சேன்-ன்னார் டிரைவர்..
“ஏன்?”-ன்னு கேட்டார்.
அதைப் பார்க்கிறவங்க யாராச்சும் அதை எடுத்துக்கலாம்-ன்னு
நினைச்சாச்சி சவாரிக்கு வருவாங்க ...அதுக்காகத்தான் அது-ன்னாரு டிரைவர். 😐
மேலும் பல
மேலும் பல
No comments