பிழை...
கானல்நீரைக் கண்டுருகி
கரையொதுங்கி மீனைப்போல்
எனைவிட்டுப் பிரிந்ததில்
என்னவளும் அடங்குவாள்
எட்டிநின்று பார்த்தபோது
என்திறனை ரசித்தவள்
கட்டிக்கவா என்றபோது
காசில்லையே ஒதுக்கினாள்
அன்றைக்கு வறுமையில்
அவளையிழந்து நான்துடித்தேன்
இன்றைக்கோ அவ்வலியில்
இமயமளவு எழுதிக்குவித்தேன்
அன்றைக்கு வெல்லாதிறமை
இன்றைக்கு வென்றது
அன்றைக்கு இல்லாகாசு
இன்றைக்கு வந்தது
அன்றைக்கு அவளைநான்
இழந்துநின்றது காலப்பிழை
இன்றைக்கு என்னையவள்
இழந்துநிற்பது அவளின்பிழை
என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️
-கவிஞர் செந்தமிழ்தாசன்
No comments