CT

அண்மை பதிவுகள்

மூன்று நண்பர்கள்...

tamilkaru stories


ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான்..

அவன் பேர்ல ஏதோ குற்றச்சாட்டு..

அதனாலே அரண்மனையிலிருந்து அழைப்பு வந்தது.

“ உன்னை விசாரிக்க வேண்டியிருக்கு..! அதனாலே அரண்மனை விசாரணை மண்டபத்துக்கு வந்து சேர் “ அப்படிங்கறது அரண்மனை ஆணை..!

நம்ம பேர்ல எந்த தப்பும் இல்லையே... நாம எந்த தவறும் செய்யலையே..-ன்னு நினைச்சான். இருந்தாலும் அரசாங்க உத்தரவு. அதை அலட்சியம் செய்ய முடியுமா...போய்தான் தீர வேண்டும்.

தனியா போக அவனுக்குத் தயக்கம்...

தன் கூட யாராவது வந்தா தேவலை-ன்னு நினைச்சான்..

யோசனை பண்ணினான்.

அவனுக்கு மூன்று நண்பர்கள் இருந்தாங்க அவங்கள யாரையாச்சு ஒருத்தர அழைச்சிட்டு போலாம்னு முடிவெடுத்தான்.

ரொம்ப நெருக்கமான நண்பன் வீட்டுக்கு போய் நடந்தத கூறி நீயும் என் கூட வந்து எனக்காக வாதடனும்னு கேட்டுக்கிட்டான்.

என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டான்..!

“ரொம்ப நெருக்கமா பழகின இவனே இப்படி சொல்லிட்டானே-ன்னு நினைச்சு கொஞ்சம் வருத்தப்பட்டான்”.

சரி பரவால இன்னொரு நண்பன்கிட்ட போவோம்னு அவன் கிட்டே போனான்.

அவன் என்ன சொன்னான்னா... நான் அரண்மனை வாயில் வரைக்கும் வரேன் அதுக்குமேலே நீதான் பாத்துக்கணும்-ன்னா... அப்படி அது வரை வந்து என்ன பிரயோஜனம் –ன்னு நினைச்சான்.

சரி மூணாவது நண்பன்கிட்ட போனான். அதிக நெருக்கம்ல இல்லை.. இருந்தாலும் போய் விவரத்தை சொன்னான்..

அவன் என்ன சொன்னான் தெரியுமா?.

“ஒண்ணுமே சொல்லலே உடனே புறப்பட்டான் வா போகலாம்!”-ன்னு.
கூடவே கடைசி வரைக்கும் வந்தான் ராஜா கிட்ட இவனுக்காக வாதாடினான்.. பரிந்து பேசி சுமூக முடிவுக்கு வழி வகுத்துக் கொடுத்தான்.                    

இது ஒரு யூதக் கதை. இதில் உள்ள கருத்து என்னன்னா...

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று நண்பர்கள் உண்டு.

முதல் நண்பனுக்கு பேர் – பணம்

இரண்டாவது நண்பனின் பேர் – சொந்தம்.

மூன்றாவது நண்பனின் பேர் என்ன தெரியுமா?. – நற்செயல்கள் !.

கடைசியிலே பணம் - கூட வராது.

சொந்தம் - கல்லறை வரைக்கு வரும்.      

நற்செயல்கள் தான் கூடவே வரும். –ன்னு கருத்தை வலியுறுத்துவதுதான் இந்த கதை.

நம்ம ஆள் ஒருத்தன் ஒரு சிக்கலில் மாட்டிக்கிட்டான்.
ஒரு சைக்கிள திருடிட்டதா அவன் பேர்ல வழக்கு!
ஒரு நண்பனை தேடித் போனான்.
‘எனக்கு சாதகமா சாட்சி சொல்ல வரணும்’-ன்னு கூப்பிட்டான்.
அவன் மறுத்துட்டான்...
“இதோ பாருப்பா உனக்கு சாதகமா சாட்சி சொல்ல முடியாத நிலையிலே இருக்கேன் .
அதுக்கு மூணு காரணங்கள்...
1.இது வரைக்கும் சாட்சி சொல்லி எனக்கு பழக்கம் இல்லை.
2.பொய் சாட்சி சொல்றது தப்பு-ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.
3.நீ திருடிட்டு போனியே சைக்கிள்... அந்த சைக்கிளே என்னோடதுதான்!”-ன்னு சொன்னான் :-D  


தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் படைப்பிலிருந்து குறுந்தகவல்.




No comments